தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-318

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி(ஸல்) அவர்களின் தொழுகையை இரவில் நான் உற்று கவனித்துள்ளேன். கட்டையிலான அவர்களது நிலைப்படியை தலையணையாக்கிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் எழுந்து மிக மிக நீண்ட இரண்டு ரக்அத் தொழுதார்கள்;. பின்பு முன்பு இருந்தது போன்றில்லாமல் இரண்டு ரக்அத் தொழுவார்கள். அதன் பின்பும் முன்பு போன்று (நீண்ட அளவில்) இல்லாமல் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு முன்பு போன்று, (சற்று நீண்டதாக) இல்லாமல் (சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள்.அதற்குப் பிறகு முன்பு போன்று இல்லாமல் (மிகச் சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்குப் பிறகும் முன்பு போல் இல்லாமல் (மிக மிக சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு (ஒரு ரக்அத்) வித்ருத் தொழுதார்கள். இந்த ரக்அத் (எண்ணிக்கை) 13 ஆகும் என ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 318)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ أَخْبَرَهُ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ

لَأَرْمُقَنَّ اللَّيْلَةَ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ، أَوْ فُسْطَاطَهُ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَصَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ أَوْتَرَ فَتِلْكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-318.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.