தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-320

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

சிரியா நாட்டைச் சேர்ந்த அபூ முஹம்மத் என்பவர் ‘வித்ருத் தொழுகை’ கடமையானதாகும் என்று கூறியதாக பனு கினானாவைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து கூறினார். நான் (இது விஷயமாகக் கேட்க) உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் பள்ளியில் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்த போது அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அபூ முஹம்மத் அவர்கள் கூறிய செய்தியை அவர்களிடம் தொரிவித்தேன். ‘ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி உள்ளான். யார் அந்தக் கடமையை லேசாகக் கருதி அவற்றில் எதையும் பாழாக்கி விடாமல் நிறைவேற்றுகின்றாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது பொறுப்பாகி விடுகிறது. ஒருவர் அவைகளை நிறைவேற்றவில்லையாயின் அல்லாஹ்வின் மீது (எவ்விதப்) பொறுப்பும் இல்லை. அவன் விரும்பினால் அவனைத் தண்டிக்கலாம். விரும்பினால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, (ஐந்து நேரத் தொழுகை தவிர மற்ற தொழுகைகள் சுன்னத் என்பதால்) அபூ முஹம்மத் அவர்கள் (வித்ரு கடமை என்று கூறியதன் மூலம்) பொய் கூறி விட்டார் என உபாதா(ரலி) கூறினார்கள். இதை முக்தஜ்ஜி என்பார் கூறுகிறார்கள்.

(முஅத்தா மாலிக்: 320)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ

أَنَّ رَجُلًا مِنْ بَنِي كِنَانَةَ يُدْعَى الْمُخْدَجِيَّ سَمِعَ رَجُلًا بِالشَّامِ يُكَنَّى أَبَا مُحَمَّدٍ، يَقُولُ: إِنَّ الْوِتْرَ وَاجِبٌ، فَقَالَ: الْمُخْدَجِيُّ فَرُحْتُ إِلَى عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَاعْتَرَضْتُ لَهُ وَهُوَ رَائِحٌ إِلَى الْمَسْجِدِ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ أَبُو مُحَمَّدٍ، فَقَالَ: عُبَادَةُ كَذَبَ أَبُو مُحَمَّدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى الْعِبَادِ، فَمَنْ جَاءَ بِهِنَّ، لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا، اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ، كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ. وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ، فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ. إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-320.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.