சுலைமான் இப்னு அபீ ஹம்ஸா அவர்களை சுப்ஹுத் தொழுகையில் உமர்(ரலி) அவர்கள் பார்க்கவில்லை. உமர்(ரலி) அவர்கள் காலையில் கடை வீதிக்கு வந்தார்கள். கடைக்கும், பள்ளிக்கும் இடையில் தான் சுலைமான் அவர்களின் வீடு இருந்தது. சுலைமான் அ வர்களின் தாய் ஷிபாவைக் கண்ட உமர்(ரலி) அவர்கள், ‘நான் சுப்ஹில் சுலைமானைப் பார்க்கவில்லையே! என்று கேட்;டார்கள். ”அவர் இரவெல்லா; விழித்துத் தொழுதார். அவருக்கு தூக்கம் மிகைத்து விட்டது”” என்று அவாரின் தாயார் கூறினார். ”சுப்ஹுத் தொழுகைக்காக ஜமாஅத்தில் கலந்து கொள்வது, இரவெல்லாம் நின்று தொழுவதை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹம்ஸா கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 347)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَدَ سُلَيْمَانَ بْنَ أَبِي حَثْمَةَ فِي صَلَاةِ الصُّبْحِ، وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَدَا إِلَى السُّوقِ. وَمَسْكَنُ سُلَيْمَانَ بَيْنَ السُّوقِ وَالْمَسْجِدِ النَّبَوِيِّ فَمَرَّ عَلَى الشِّفَاءِ أُمِّ سُلَيْمَانَ، فَقَالَ لَهَا: «لَمْ أَرَ سُلَيْمَانَ فِي الصُّبْحِ». فَقَالَتْ: إِنَّهُ بَاتَ يُصَلِّي، فَغَلَبَتْهُ عَيْنَاهُ، فَقَالَ عُمَرُ: «لَأَنْ أَشْهَدَ صَلَاةَ الصُّبْحِ فِي الْجَمَاعَةِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ لَيْلَةً»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-347.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்