உதுமான்(ரலி) அவர்கள் இஷாத் தொழுகைக்காக வந்த போது, பள்ளியில் மக்கள் குறைவாக இருக்கக் கண்டார்கள். மக்கள் அதிகமாக வரட்டும் என எதிர்பார்த்து பள்ளியின் பின் வளாகத்தில் ஒருக்களித்துப் படுத்தார்கள். அதுசமயம் அவர்களிடம் இப்னு அபீ அம்ரா வந்து அருகில் அமர்ந்தார். அவர் யார்? என்று அவரிடம் கேட்டார். தான் யார்? என்று கூறியதும், உனக்கு குர்ஆன் தொரியுமா? என்று கேட்டார்கள். தொரியம் என்று கூறினார். அவரிடம் ”ஒருவர் இஷாத் தொழுகைக்கு வந்தால், அவர் பாதி இரவு நின்று தொழுதவராவார். சுப்ஹுத் தொழுகைக்கு வந்தால் அவர் முழு இரவை நின்று தொழுதவர் போலாவார்”” என உதுமான்(ரலி) கூறினார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு அபீ அம்ரா அல் அன்சாரி கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 348)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ
جَاءَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى صَلَاةِ الْعِشَاءِ فَرَأَى أَهْلَ الْمَسْجِدِ قَلِيلًا، فَاضْطَجَعَ فِي مُؤَخَّرِ الْمَسْجِدِ، يَنْتَظِرُ النَّاسَ أَنْ يَكْثُرُوا. فَأَتَاهُ ابْنُ أَبِي عَمْرَةَ فَجَلَسَ إِلَيْهِ، فَسَأَلَهُ: «مَنْ هُوَ؟» فَأَخْبَرَهُ. فَقَالَ: مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ؟ فَأَخْبَرَهُ. فَقَالَ لَهُ عُثْمَانُ: «مَنْ شَهِدَ الْعِشَاءَ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ لَيْلَةٍ. وَمَنْ شَهِدَ الصُّبْحَ فَكَأَنَّمَا قَامَ لَيْلَةً»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-348.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்