தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-383

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி(ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள், ‘தபூக்” போருக்குச் சென்ற சமயம் நபி(ஸல்) அவர்கள் ”லுஹரையும், அஸரையும்”” – ”மஹ்ரிபையும், இஷாவையும்”” ‘ஜம்உ” செய்தார்கள். அந்நாளில் தொழுகையை தாமதப்படுத்தி (போர்க்களத்தில் இருந்து) வெளியேறி லுஹரையும், அஸரையும் இணைத்துத் தொழுதார்கள். பின்பு (போர்க்களத்தில்) நுழைந்து (பின்பு அங்கிருந்து) வெளியேறி மஹ்ரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். பின்பு, நீங்கள் அல்லாஹ்வினால் தபூக் அருகே உள்ள ஊற்றுக் கண் அருதே நாளை வருவீர்கள். பகல் நேரம் வரும் வரை அங்கே நீங்கள் வராதீர்கள். அங்கே ஒருவர் வந்து விட்டால், அதன் தண்ணீரில் சிறிதளவு கூட எவரும், நான் வரும் வரை தொட வேண்டாம். அங்கே நாங்கள் வந்தோம் – அதன் பக்கம் எங்களில் இருவர் மட்டும் முந்தி (தொட்டு) விட்டனர். ஊற்றுக் கண், சிறிதளவு தண்ணீரையே வெளிப்படுத்தியது.அந்த தண்ணீரை நீங்கள் இருவரும் தொட்டீர்களா? ன்று அவ்விருவாரிடமும் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், ‘ஆம்” என்றனர். ”அல்லாஹ் தான் நாடியதை கூறுவான்”” என் அந்த இருவாரிடமும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு மக்கள் தங்கள் கைகளினால் ஊற்றிலிருந்து சிறிதளவு எடுத்து, ஒன்றில் ஒன்று சேர்த்தார்கள். பின்பு அதில் நபி(ஸல்) அவர்கள் தன் முகத்தை, தன் கைகளைக் கழுவினார்கள். பின்பு அதிலேயே அதை மீண்டும் ஊற்றினார்கள். அதிக தண்ணீரை ஊற்றுக் கண் வெளியாக்கியது. உடனே மக்கள் தண்ணீர் குடித்தார்கள். பின்பு, ”முஆதே! உனக்கு ஆயுள் நீடித்திருந்தால் இந்த இடத்தில் தோட்டங்கள் நிரம்பி இருப்பதை நீர் காண்பாய்”” என்;று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 383)

وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ أَخْبَرَهُ

أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ تَبُوكَ. فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ». قَالَ: فَأَخَّرَ الصَّلَاةَ يَوْمًا، ثُمَّ خَرَجَ «فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا»، ثُمَّ دَخَلَ. ثُمَّ خَرَجَ «فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا»، ثُمَّ قَالَ: «إِنَّكُمْ سَتَأْتُونَ غَدًا، إِنْ شَاءَ اللَّهُ عَيْنَ تَبُوكَ، وَإِنَّكُمْ لَنْ تَأْتُوهَا حَتَّى يَضْحَى النَّهَارُ، فَمَنْ جَاءَهَا فَلَا يَمَسَّ مِنْ مَائِهَا شَيْئًا»، حَتَّى آتِيَ، فَجِئْنَاهَا، وَقَدْ سَبَقَنَا إِلَيْهَا رَجُلَانِ، وَالْعَيْنُ تَبِضُّ بِشَيْءٍ مِنْ مَاءٍ، فَسَأَلَهُمَا رَسُولُ اللَّهِ: «هَلْ مَسِسْتُمَا مِنْ مَائِهَا شَيْئًا؟»، فَقَالَا: نَعَمْ. فَسَبَّهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ لَهُمَا مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. ثُمَّ غَرَفُوا بِأَيْدِيهِمْ مِنَ الْعَيْنِ، قَلِيلًا قَلِيلًا. حَتَّى اجْتَمَعَ فِي شَيْءٍ، ثُمَّ غَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيهِ وَجْهَهُ وَيَدَيْهِ. ثُمَّ أَعَادَهُ فِيهَا، فَجَرَتِ الْعَيْنُ بِمَاءٍ كَثِيرٍ “. فَاسْتَقَى النَّاسُ. ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ يَا مُعَاذُ إِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ، أَنْ تَرَى مَا هَاهُنَا قَدْ مُلِئَ جِنَانًا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-383.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.