தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-416

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் மக்கா வெற்றி வருடத்தில் ஒருநாள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களின் மகள் பாத்திமா அவர்கள் ஒரு ஆடையால் மறைத்துக் கொண்டிருக்க நபி(ஸல்) அவர்கள் குளிக்கக் கண்டேன். நான் ஸலாம் கூறியதும், ”யார் அப்பெண்?”” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ என்றேன். உம்மு ஹானிக்கு எனது வாழ்த்துக்கள் என்று நபி(ஸல்) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அவர்கள் குளித்து முடித்ததும், ஒரு ஆடையை தன் மீது சுற்றிக் கொண்டு, எட்டு ரக்அத் தொழுதார்கள். தொழுது முடித்ததும் இறைத்தூதர் அவர்களே! நான் அடைக்கலம் கொடுத்த புலான் இப்னு ஹுபைராவைக் கொல்ல வேண்டும் என என் தாய் வழிச் சகோதரர் எண்ணுகிறார் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உம்மு ஹானியே! நீர் அடைக்கலம் கொடுத்தவருக்கு நாமும் அடைக்கலம் கொடுத்தோம் என்றார்கள். இது நடந்தது லுஹா நேரத்திலாகும் என்று உம்மு ஹானீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 416)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ تَقُولُ

ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ، قَالَتْ: فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقُلْتُ: أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ، فَقَالَ: مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ. فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ انْصَرَفَ. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ زَعَمَ ابْنُ أُمِّي عَلِيٌّ أَنَّهُ قَاتِلٌ رَجُلًا أَجَرْتُهُ، فُلَانُ بْنُ هُبَيْرَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ»، قَالَتْ أُمُّ هَانِئٍ: وَذَلِكَ ضُحًى


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-416.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.