தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-457

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஸஃது இப்னு உபாதா (ரலி) அவர்களது வீட்டில் இருந்த எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவோம் என்று அவர்களிடம் பஷீர் இப்னு ஸஃது (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் இதைக் கேட்டிருக்கக் கூடாது என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பின்பு அவர்கள், ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன், இன்னக்க ஹமீதுன் மஜீத்””, என்று கூறுங்கள். ஸலாம் கூறுவது, நீங்கள் அறிந்தது போல் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமஸ்ஊத் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 457)

وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نُعَيْمِ بْنِ عَبْدِ اللهِ الْمُجْمِرِ، عَن مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ عَن أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ:

أَتَانَا رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ، ثُمَّ قَالَ: قُولُوا: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلاَمُ كَمَا قَدْ عَلِمْتُمْ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-457.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: முஸ்லிம்-682 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.