நபி(ஸல்) அவர்கள் அபூபக்கருக்கு கட்டளையிடுங்கள். மக்களுக்கு அவர் தொழ வைக்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களே! உங்களின் இடத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் இருந்தால், அவர்களை மக்களுக்கு தன் அழுகை காரணமாக (ஓதுதல் எதையும்) கேட்கச் செய்ய மாட்டார். எனவே, உமருக்குக் கட்டளையிடுங்கள். அவர்கள் மக்களுக்கு தொழ வைக்கட்டும்”” என்று கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்), ”அபூபக்கரை மக்களுக்கு தொழ வைக்கக் கட்டளையிடுங்கள்”” என்று கூறினார்கள். உடனே நான் ஹபஸா(ரலி) அவர்களிடம் வந்து, ”அபூபக்கர் அவர்கள் உங்கள் இடத்தில் இருந்தால் தன் அழுகை காரணமாக மக்களைக் கேட்கச் செய்ய மாட்டார். உமர்(ரலி) க்கு ஏவுங்கள். மக்களுக்கு அவர்கள் தொழ வைக்கட்டும்”” என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறுங்கள் என்று கூறினேன். ஹபஸாவும் அப்படியே செய்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், ”நீங்கள் என்ன யூசுஃப் நபியைச் சேர்ந்தவர்களா? ”அபூபக்கர்(ரலி) அவர்களை மக்களுக்குத் தொழ வைக்கக் கட்டளையிடுங்கள்”” என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது ஹபஸா(ரலி) அவர்கள் என்னிடம், ”உம்மிடம் இருந்து சிறந்ததை நான் அடையவில்லையே”” என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 473)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، فَقَالَتْ عَائِشَةُ: إِنَّ أَبَا بَكْرٍ، يَا رَسُولَ اللَّهِ، إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، قَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ، مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَفَعَلَتْ حَفْصَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُنْ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ. مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ»، فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لِأُصِيبَ مِنْكِ خَيْرًا
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-473.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்