தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-474

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்களுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்த போது, அவர்களிடம் ஒருவர் வந்து, அவர்களிடம் ரகசியமாகக் கூறினார். எதை அவர் ரகசியமாகக் கூறினார் என்பது விளங்கப்படவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு கூறியதன்பின்பே தொரிந்தது. அவர். நயவஞ்சகர்களில் ஒருவரைக் கொலை செய்ய நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி வேண்டி உள்ளர். (நயவஞ்சகரான) அவர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்”” என்று சாட்சி கூறவில்லையா? என்று நபி(ஸல்) அவாகள் சப்தமிட்டுக் கேட்டார்கள். ”ஆம், (சாட்சி கூறினார்) ஆனால் அதன் சாட்சி பகர்தலாக அவருக்கு இல்லை”” என்று கூறினார். ” அவர் தொழவில்லையா?”” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”ஆம் (தொழுதார்). ஆனால் அவருக்கு தொழுகையே இல்லை”” என்று அவர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், இவர்களைத் தான் கொல்வதை விட்டும் அல்லாஹ் எனக்குத் தடை விதித்துள்ளான்”” என்று கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னுல் கியார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 474)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَنَّهُ قَالَ

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ بَيْنَ ظَهْرَانَيِ النَّاسِ إِذْ جَاءَهُ رَجُلٌ فَسَارَّهُ. فَلَمْ يُدْرَ مَا سَارَّهُ بِهِ، حَتَّى جَهَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَإِذَا هُوَ يَسْتَأْذِنُهُ فِي قَتْلِ رَجُلٍ مِنَ الْمُنَافِقِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ جَهَرَ: «أَلَيْسَ يَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، فَقَالَ الرَّجُلُ: بَلَى. وَلَا شَهَادَةَ لَهُ، فَقَالَ: «أَلَيْسَ يُصَلِّي؟» قَالَ: بَلَى. وَلَا صَلَاةَ لَهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ الَّذِينَ نَهَانِي اللَّهُ عَنْهُمْ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-474.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.