தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-476

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

குருடரான நிலையில் தன் மக்களுக்கு இமாமாக தொழுகை நடத்தக் கூடிய கத்பான் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவ்வூர் கடும் இருளும் மழையும், தண்ணீரும் கூடுதலாக உள்ளது. நானோ பார்வையற்ற மனிதன். எனவே, இறைத்தூதர் அவர்களே! என் வீட்டில் ஒரு இடத்தில் தொழுங்கள். நான் அதை என் தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்வேனே?’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் (அவரது வீட்டுக்கு) வந்து, ‘நான் எங்கு தொழ விரும்புகிறீர்?’ எனக் கேட்டார்கள். வீட்டின் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார். அதில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள் என் மஹ்மூத் இப்னு ரபீஉ அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).

(முஅத்தா மாலிக்: 476)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ

أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالْمَطَرُ وَالسَّيْلُ. وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ. فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذْهُ مُصَلًّى، فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ؟» فَأَشَارَ لَهُ إِلَى مَكَانٍ مِنَ الْبَيْتِ. فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-476.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.