அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘நீ அறிஞர்கள் அதிகம் உள்ள காலத்தில் உள்ளாய். மேலும் ஓதுபவர்கள் குறைவாக உள்ளனர். இக்காலத்தில் குர்ஆன் சட்டங்கள் பேணப்படும். அதக் எழுத்து வடிவம் கவனத்தில் விடப்படும். யாசகம் கேட்போர் குறைவாக உள்ளனர். நன்கொடை வழங்குவோர் அதிகம் உள்ளனர். இக்காலத்தில் தொழுகையை நீட்டுவார்கள். (குத்பா) உரையை குறைத்து விடுவார்கள். தங்களின் மனோ இச்சைகளுக்கு முன்பு தங்களின் செயல்களை முற்படுத்துவார்கள். இனி மக்களிடையே ஒரு காலம் வரும். அதில் அறிஞர்கள் குறைவாக இருப்பர். ஓதுபவர்கள் அதிகம் இருப்பார்கள். குர்ஆனின் எழுத்து வடிவம் பேணப்படும். அதன் சட்டங்கள் வீணடிக்கப்படும். யாசகம் கேட்போர் அதிகம் இருப்பார்கள். (நன்கொடை) வழங்குவோர் குறைவாக இருப்பார்கள். அதில் உரையை நீட்டுவார்கள். தொழுகையை குறைப்பார்கள். தங்களின் செயல்களுக்கு முன்பு தங்களின் மனோ இச்சைகளை முற்படுத்துவார்கள்’ என்று கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 479)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ
قَالَ لِإِنْسَانٍ: «إِنَّكَ فِي زَمَانٍ كَثِيرٌ فُقَهَاؤُهُ، قَلِيلٌ قُرَّاؤُهُ، تُحْفَظُ فِيهِ حُدُودُ الْقُرْآنِ، وَتُضَيَّعُ حُرُوفُهُ. قَلِيلٌ مَنْ يَسْأَلُ. كَثِيرٌ مَنْ يُعْطِي. يُطِيلُونَ فِيهِ الصَّلَاةَ، وَيَقْصُرُونَ الْخُطْبَةَ يُبَدُّونَ. أَعْمَالَهُمْ قَبْلَ أَهْوَائِهِمْ، وَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ قَلِيلٌ فُقَهَاؤُهُ، كَثِيرٌ قُرَّاؤُهُ، يُحْفَظُ فِيهِ حُرُوفُ الْقُرْآنِ وَتُضَيَّعُ حُدُودُهُ. كَثِيرٌ مَنْ يَسْأَلُ، قَلِيلٌ مَنْ يُعْطِي، يُطِيلُونَ فِيهِ الْخُطْبَةَ، وَيَقْصُرُونَ الصَّلَاةَ. يُبَدُّونَ فِيهِ أَهْوَاءَهُمْ قَبْلَ أَعْمَالِهِمْ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-479.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்