நான் ஒரு பெருநாளில் உமர்(ரலி) அவர்களுடன் கலந்திருந்தேன். அவர்கள் தொழுகை நடத்தி விட்டு பிரசங்கம் செய்வார்கள். (அதில) ‘இந்த இரண்டு பெருநாட்களில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இன்று உங்களை நோன்பிலிருந்து விடுவித்த நாளாகும். மற்றொரு நாளோ நீங்கள் கொடுத்த குர்பானியில் இருந்து உண்ணும் நாளாகும் என்று கூறினார்கள்.
(இது போல்) உதுமான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாளில் கலந்து கொண்ட போது அவர்கள் வந்து தொழுகை நடத்தினார்கள். அது முடிந்ததும் பிரசங்கம் செய்தார்கள். (அதில்) ‘இன்று உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் (ஜும்ஆ வும் பெருநாளும்) சேர்ந்து வந்து விட்டது. ஜும்ஆ விலும் கலந்து கொள்ளலாம். எனவே விரும்புவோர் ஜும்ஆ தொழுது கொள்ளுங்கள். வீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கு (ஜும்ஆ தொழாமல் செல்ல) அனுமதிக்கிறேன் என்று கூறினார்கள்.
(இது போல்) உதுமான்(ரலி) முற்றுகையிடப்பட்டிருந்த நேரத்தில் அவர்களுடன் பெருநாளில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழ வைத்து விட்டு, பின்பு பிரசங்கம் செய்தார்கள் என அபூ உபைத் அவர்கள் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 491)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، قَالَ
شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ، فَقَالَ: ” إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْآخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ ” قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ. فَجَاءَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ. وَقَالَ: إِنَّهُ قَدِ «اجْتَمَعَ لَكُمْ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ. فَمَنْ أَحَبَّ مِنْ أَهْلِ الْعَالِيَةِ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ فَلْيَنْتَظِرْهَا، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ، فَقَدْ أَذِنْتُ لَهُ»
قَالَ أَبُو عُبَيْدٍ ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَعُثْمَانُ مَحْصُورٌ فَجَاءَ «فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-491.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்