தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-504

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…(படையில்) ஒரு பிரிவினர் இமாமுடன் இருக்கவும், மற்றொரு பிரிவினர் எதிரிகளின் எதிரேயும் இருக்க இமாம் (தொழ) தயாராகுவார். ஒரு ரக்அத்தின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து இமாம் செய்வார். பின்பு நிலைக்கு வருவார். நிலையிலேயே இருப்பார். இமாம் நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் தாங்களாகவே மற்றொரு ரக்அத்தை பூர்த்தி செய்து விட்டு ஸலாம் கூறி முடிப்பார்கள். பின்பு எதிரிகளை எதிர் நோக்குவார்கள். ஏற்கனவே தொழாமல் இருந்த மற்றவர்கள் முன்னோக்குவார்கள். இமாமுக்கும் பின்னே நின்று தக்பீர் கூறுவார்கள். அவர்களுடன் ருகூஉ ம், ஸஜ்தாவும் செய்து ஸலாம் கொடுத்து விடுவார். உடன் இவர்கள் எழுந்து தாங்களாகவே இரண்டாவது ரக்அத்தை முடித்து ஸலாம் கூறுவார்கள்.

இதுவே பயத் தொழுகை முறையாகும் என ஸாலிஹ் இப்னு கவ்வாத் அவர்களிடம் ஸஹ்ல் இப்னு அபூ ஹஸமா (ரலி) கூறினார்கள்….

(முஅத்தா மாலிக்: 504)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، أَنَّ سَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ، حَدَّثَهُ

أَنَّ: «صَلَاةَ الْخَوْفِ أَنْ يَقُومَ الْإِمَامُ، وَمَعَهُ طَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَطَائِفَةٌ مُوَاجِهَةٌ الْعَدُوَّ. فَيَرْكَعُ الْإِمَامُ رَكْعَةً، وَيَسْجُدُ بِالَّذِينَ مَعَهُ، ثُمَّ يَقُومُ. فَإِذَا اسْتَوَى قَائِمًا، ثَبَتَ وَأَتَمُّوا لِأَنْفُسِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ. ثُمَّ يُسَلِّمُونَ، وَيَنْصَرِفُونَ. وَالْإِمَامُ قَائِمٌ. فَيَكُونُونَ وِجَاهَ الْعَدُوِّ. ثُمَّ يُقْبِلُ الْآخَرُونَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، فَيُكَبِّرُونَ وَرَاءَ الْإِمَامِ، فَيَرْكَعُ بِهِمُ الرَّكْعَةَ وَيَسْجُدُ. ثُمَّ يُسَلِّمُ، فَيَقُومُونَ فَيَرْكَعُونَ لِأَنْفُسِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ. ثُمَّ يُسَلِّمُونَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-504.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




1 comment on muwatta-malik-504

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.