தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-509

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யூதப் பெண் ஒருத்தி, ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து (கப்ரு வேதனை பற்றி) கேட்டாள். ‘கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவானாக!’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ‘மக்கள் தங்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுவார்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஆயிஷா(ரலி) கேட்டார்கள். இதிலிருந்து அல்லாஹ்விடம் காப்பாற்றிட வேண்டுகிறேன் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், காலை நேரத்தில் வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் திரும்பினார்கள். இரு மலைக்குன்றுகளுக்கிடையில் நடந்து சென்று நின்றார்கள். தொழ வைத்தார்கள். அவர்களின் பின்னே மக்களும் நின்றார்கள். நீண்ட நேரம் நிலையில் இருந்தார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்தின நிலை போன்று இல்லாமல் நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்தின ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தாச் செய்தார்கள். பின்பு முந்திய நிலை போலன்றி நீண்ட நேரமாக நின்றார்கள். பின்பு முதல் ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்திய நிலை போலன்றி நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தா செய்தார்கள். பின்பு திரும்பினார்கள். அப்போது அல்லாஹ் நாடிய அளவுக்கு கூற வேண்டியதைக் கூறினார்கள். பின்பு கப்ரு வேதனையை விட்டு அவர்கள் பாதுகாப்பு வேண்டிட அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

(முஅத்தா மாலிக்: 509)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّ يَهُوديَّةً جَاءَتْ تَسْأَلُهَا. فَقَالَتْ: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ. فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُعَذَّبُ النَّاسُ فِي قُبُورِهِمْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «عَائِذًا بِاللَّهِ مِنْ ذَلِكَ». ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا. فَخَسَفَتِ الشَّمْسُ. فَرَجَعَ ضُحًى. فَمَرَّ بَيْنَ ظَهْرَانَيِ الْحُجَرِ. ثُمَّ قَامَ يُصَلِّي وَقَامَ النَّاسُ وَرَاءَهُ. فَقَامَ قِيَامًا طَوِيلًا. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَسَجَدَ. ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ. ثُمَّ انْصَرَفَ، فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. ثُمَّ «أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-509.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.