தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-510

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 120

கிரகணத் தொழுகை பற்றி..

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, நான்ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது மக்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். உடன் ஆயிஷா(ரலி) அவர்களும் நின்று தொழுதார்கள். மக்களுக்கு என்ன நேர்ந்தது? என நான் கேட்டேன். ஆயிஷா(ரலி) அவர்கள் வானத்தின் பக்கம் தன் கையால் சமிக்ஞை செய்தார்கள். பின்பு, ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறினார்கள். ‘இது ஒரு அத்தாட்சி தானே’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ என தன் தலை மூலமாக சமிக்ஞை செய்தார்கள். நானும் தொழ நின்றேன். எனக்கு மயக்கம் ஏற்பட்டது. நான் என் தலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

”பின்பு” இதுவரை நான் பார்த்திராத சொர்க்கத்தையும், நரகத்தையும் என் இந்த இடத்திலேயே நான் காட்டப்பட்டேன். நீங்கள் கப்ரில் சோதிக்கப்படுவீர்கள். விரைவில் தஜ்ஜால் மூலமும் சோதிக்கப்படுவீர்கள். உங்களில் ஒருவர் கொண்டு வரப்பட்டதும், ‘இவர் பற்றி நீ அறிந்தது என்ன? என்று அவரிடம் கேட்கப்படும். அப்போது ஒரு இறைவிசுவாசி, ‘இவர், முஹம்மது(ஸல்) எனும் இறைத்தூதர் ஆவார். எங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் கொண்டு வந்தார். நாங்கள் ஏற்றோம். நம்பிக்கை கொண்டோம். நாங்கள் (அவரை) பின்பற்றினோம் என்று கூறுவார். அப்போது அவரிடம் நல்லவிதமாகத் தூங்குவீராக! நீர் முஃமினாக இருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்’ என்று கூறப்படும் நயவஞ்சகரோ, ‘இவரை நான் அறிய மாட்டேன். இவர் பற்றி எதையோ மக்கள் கூறியதைக் கேட்டேன். அதை நானும் கூறினேன்’ என்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவத்தை அஸ்மா பின் அபூபக்கர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 510)

120- بَابُ مَا جَاءَ فِي صَلَاةِ الْكُسُوفِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهَا قَالَتْ

أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ خَسَفَتِ الشَّمْسُ فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ. وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي. فَقُلْتُ: مَا لِلنَّاسِ؟ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ، وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ. قَالَتْ: فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الْغَشْيُ. وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي الْمَاءَ، فَحَمِدَ اللَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: ” مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا. حَتَّى الْجَنَّةُ وَالنَّارُ. وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ أَوْ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا الْمُؤْمِنُ أَوِ الْمُوقِنُ لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ، فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى. فَأَجَبْنَا، وَآمَنَّا، وَاتَّبَعْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا، قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا. وَأَمَّا الْمُنَافِقُ أَوِ الْمُرْتَابُ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ، فَيَقُولُ: لَا أَدْرِي سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-510.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.