பாடம் 123
நட்சத்திரங்கள் மூலம் மழை பெய்யத் தேடுவது
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த போது இரவு மழை பெய்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள். (தொழுகை) முடிந்த போது, மக்களை முன்னோக்கிய அவர்கள், ‘உங்கள் இறைவன் என்ன கூறுகிறான்? என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்’ என நபித்தோழர்கள் கூறினார்கள். ‘என் அடியார்களில் ஒருவர்என்னை நம்பியவராகவும், ஒருவர் என்னை மறுத்தவராகவும் காலையில் எழுகிறார்கள். ‘அல்லாஹ்வின் அருளால், அவன் கருணையினால் நாம் மழை கொடுக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவராக உள்ளார். இன்ன, இன்ன நட்சத்திரம் மூலமாக மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவராவார்’ என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 516)123- بَابُ الِاسْتِمْطَارِ بِالنُّجُومِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ
صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ. فَلَمَّا انْصَرَفَ، أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «أَتَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ، قَالَ: ” أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي، وَكَافِرٌ بِي. فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ. فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ. وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوْكَبِ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-516.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்