தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-522

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 126

‘கிப்லா’ திசையில் எச்சில் துப்புவது கூடாது

நபி(ஸல்) அவர்கள் கிப்லா – (திசை) சுவற்றில் காரல் எச்சிலைக் கண்டு, அதைச் சுரண்டினார்கள். பின்பு மக்களை நோக்கியவர்களாக ‘உங்களில் ஒருவர் தொழுதால் தன் முகத்தின் முன்பாக எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் தொழும் போது அவன் முன்னே இருக்கிறான்’ என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 522)

126- بَابُ النَّهْيِ عَنِ الْبُصَاقِ فِي الْقِبْلَةِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ، فَحَكَّهُ. ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-522.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-406 .

3 comments on muwatta-malik-522

  1. ‘எவன் கிப்லா திசையை நோக்கி எச்சில் துப்பினானோ மறுமை நாளில் அவனது எச்சில் அவனின் இரண்டு கண்களுக்கு முன்பாக வரும்.
    (அபூ தாவூது 3824, ஸஹீஹ் ஜாமிஃ 6160)

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த ஹதீஸின் தரம் குறித்து தயவு செய்து விளக்கம் தரவும் மேலும் இது சாதாரணமாகவே கிப்லா திசையில் எச்சில் துப்புவதை குறிக்குமா அல்லது தொழுவும் போது பள்ளிவாசலில் எச்சில் துப்புவதை குறிக்குமா என்பதை விளக்கவும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      கிப்லாவை முன்னோக்கி எச்சில் துப்பக் கூடாது என்ற கருத்தில் இரு வகையான ஹதீஸ்களும் வந்துள்ளது என்பதால் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பக்கூடாது என்று ஹதீஸ்கலை அறிஞர்களில் இமாம் நவவீ, அல்பானீ போன்ற இன்னும் பலரும் கூறியுள்ளனர். இப்னு ரஜப் போன்ற சில அறிஞர்கள் இந்த சட்டம் பள்ளியிலும், தொழும்போது மட்டும் தான் என்றும் கூறியுள்ளனர். எனவே இதைப் பற்றி விரிவான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.