தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-539

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நானும், முஹம்மது இப்னு யஹ்யா அவர்களும் அமர்ந்திருந்தோம். அப்போது முஹம்மது அவர்கள் ஒருவரை அழைத்து, ‘உன் தந்தையிடம் நீ கேட்டதை எனக்குக் கூறுங்கள்’ என்று கேட்டார்கள். அப்போது அவர் தந்தை கூறியதாக கூறினார் (அவர் தந்தை கூறியதாவது:-)

நான் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் சென்று, ‘ஏழு முறைகளில் குர்ஆன் ஓதுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஸைத் அவர்கள் (எல்லாமே) அழகானது தான் என்று கூறினார்கள். தொடர்ந்து அவர் 15 நாள்களில் அல்லது 20 நாட்களில் தான் தொடர்ந்து குர்ஆனை ஓதுவது எனக்கு விருப்பமானது என்று கூறி விட்டு, அது ஏன் என்று என்னிடம் கேட்பீராக! என்றார்கள். அதற்கு நான் அவ்வாறே கேட்கிறேன்’ என்றேன். அதை சிந்தித்து விளங்குவதற்காகவே என்று விடையளித்தார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 539)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ قَالَ

كُنْتُ أَنَا وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حَبَّانَ، جَالِسَيْنِ. فَدَعَا مُحَمَّدٌ رَجُلًا. فَقَالَ: أَخْبِرْنِي بِالَّذِي سَمِعْتَ مِنْ أَبِيكَ. فَقَالَ الرَّجُلُ: أَخْبَرَنِي أَبِي أَنَّهُ أَتَى زَيْدَ بْنَ ثَابِتٍ، فَقَالَ لَهُ: كَيْفَ تَرَى فِي قِرَاءَةِ الْقُرْآنِ فِي سَبْعٍ؟ فَقَالَ زَيْدٌ: «حَسَنٌ. وَلَأَنْ أَقْرَأَهُ فِي نِصْفٍ، أَوْ عَشْرٍ، أَحَبُّ إِلَيَّ». وَسَلْنِي لِمَ ذَاكَ؟ قَالَ: فَإِنِّي أَسْأَلُكَ. قَالَ زَيْدٌ «لِكَيْ أَتَدَبَّرَهُ وَأَقِفَ عَلَيْهِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-539.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.