தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-540

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 133

குர்ஆன் பற்றி..

ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி) அவர்கள், சூரா ஃபுர்கானை (அத்தியாயத்தை) நபி(ஸல்) அவர்களும், நானும் ஓதுவதற்கு மாற்றமாக ஓதுவதை நான் கேட்டேன். அவரிடம் வேகமாகச் சென்றேன். பின்பு அவர் ஓதி முடிக்கும் வரை காத்திருந்தேன். (முடிந்ததும்) அவரை அவரது மேலாடையால் சுற்றி (கட்டி) அவரை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களே! சூரா ஃபுர்கானை நீங்கள் ஓதுவதற்கு மாற்றமாக இவர் ஓதிடக் கேட்டேன்’ என்று கூறினேன். ‘அவரை அவிழ்த்து விடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு, (அவரிடம்) ‘நீ ஓது’ என்றார்கள். நான் எப்படி ஓதக் கேட்டேனோ அதன்படியே அவர் ஓதினார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இவ்வாறே (குர்ஆன்) இறக்கியருளப்பட்டது’ என்று கூறினார்கள். பின்பு என்னிடம் ‘நீர் ஓதவும்’ என்று கூறினார்கள். அதை நான் ஓதினேன். ‘இவ்வாறே (குர்ஆன்) இறக்கியருளப்பட்டது. இந்தக் குர்ஆன் ஏழு விதத்தில் இறக்கப்பட்டது. எனவே நீங்கள் உங்களுக்கு எளிதானதையே ஓதுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 540)

133- بَابُ مَا جَاءَ فِي الْقُرْآنِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ

سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْسِلْهُ»، ثُمَّ قَالَ: اقْرَأْ يَا هِشَامُ فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ»، ثُمَّ قَالَ لِي: اقْرَأْ فَقَرَأْتُهَا. فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ»، «إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-540.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.