தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-558

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ”குல்ஹுவல்லாஹு அஹது”” சூராவை ஓதுவதைக் கேட்டார்கள். ”அவருக்கு அவசியமாகி விட்டது”” என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என்ன அவசியமாகி விட்டது? என்று கேட்டேன். ”சொர்க்கம்”” என்று கூறினார்கள். உடனே நான் அந்த மனிதரிடம் சென்று, இச்செய்தியைக் கூற எண்ணினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் காலை நேர உணவு தவறிவிடுமோ எனப் பயந்தேன். எனவே நபி (ஸல்) அவர்களுடன் காலை நேர உணவைச் சாப்பிட்டேன். பின்பு அந்த மனிதரிடம் சென்றேன். அவர் சென்று விட்டதைக் கண்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு கத்தாப் குடும்பத்தாரின் அடிமையான உபைத் இப்னு ஹுனைன் கூறுகிறார்.

(முஅத்தா மாலிக்: 558)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى آلِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ

أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. «فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، فَسَأَلْتُهُ: مَاذَا يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «الْجَنَّةُ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ فَأَرَدْتُ أَنْ أَذْهَبَ إِلَيْهِ، فَأُبَشِّرَهُ. ثُمَّ فَرِقْتُ أَنْ يَفُوتَنِي الْغَدَاءُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآثَرْتُ الْغَدَاءَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ ذَهَبْتُ إِلَى الرَّجُلِ فَوَجَدْتُهُ قَدْ ذَهَبَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-558.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.