பாடம்: 136
அல்லாஹ்வை நினைவு கூர்தல்.
”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷாரிகலஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று ஒருவர் நூறு தடவை கூறினால், அவருக்கு பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மைகள் உண்டு. அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். மேலும் நூறு தீமைகள் அழிக்கப்பட்டு விடும். அந்நாளில் (காலை முதல்) மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உண்டு. வேறு எவரும் இவர் செய்ததை விட சிறந்ததை செய்து விட முடியாது. ஆனால் இதை விட அதிகமாக செய்ததைத் தவிர என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(அரபி வாசகத்தின் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு இணையாளன் இல்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம். அவனுக்கே புகழ் அனைத்தும். அவனே அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்).
(முஅத்தா மாலிக்: 560)136 – بَابُ مَا جَاءَ فِي ذِكْرِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ. كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ. وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-560.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்