நான் நபி(ஸல்) அவர்களின் அருகே தூங்கிக் கொண்டிருந்தேன். இரவில் அவர்களை நான் (தேடி) துளாவினேன். என் கையால் அவர்களைத் தொட்டேன். என் கை அவர்களின் பாதங்கள் மீது இருந்தது. அவர்கள் ஸஜ்தா செய்தவர்களாக, ”அஊது பிரிழாக மின் ஸக்திக, வபி முஆஃபதிக மின் உகூபதிக்க, வபிக மின்க லா உஹ்ஸீ ஃஸனாஅன் அலய்க, அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக”” என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
இதன் பொருள்: இறைவனே! உன் திருப்தி மூலம் உன் கோபத்தை விட்டும், உன் விடுதலை மூலம் உன் தண்டனையை விட்டும், உன் அரவணைப்பு மூலம் உன் புறக்கணிப்பை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உனக்கு எதிராக புகழை நான் எண்ணவில்லை. நீ, உன்னை நீ புகழ்வது போல் உள்ளவனாவாய்.
(முஅத்தா மாலிக்: 571)وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ
كُنْتُ نَائِمَةً إِلَى جَنْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَفَقَدْتُهُ مِنَ اللَّيْلِ، فَلَمَسْتُهُ بِيَدِي، فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمَيْهِ، وَهُوَ سَاجِدٌ، يَقُولُ: «أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-571.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்