தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-575

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மதீனாவிற்கு அருகில் உள்ள பனூ முஆபியா குடியிருப்புப் பகுதியில் இருந்த எங்களிடம் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். ”இந்த உங்களின் பள்ளிவாசலில் நபி(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள் என்பதை அறிவீர்களா?”” என்று கேட்டார். அவரிடம் ‘ஆம்” என்றேன். மேலும் அதில் மூலைப் பகுதியை நான் காண்பித்தேன். ”இங்கே மூன்று விஷயங்களுக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்தித்ததை நீர் அறிவீரா?”” என்று கேட்டார். ‘ஆம்” என்றேன். ”அவற்றை எனக்குக் கூறு”” என்று கேட்டார்கள்;. ”முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாத எதிரி வெற்றி கொள்ளாமல் இருக்கவும், பஞ்சம், வெள்ளத்தால் அவர்கள் அழிக்கப்படாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். அவ்விரண்டையும் கொடுக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை என்று கூறினேன். ”நீர் உண்மை கூறினீர்”” என்று கூறிய இப்னு உமர்(ரலி) அவர்கள், ”மறுமை நாள் வரை குழப்பம் (பிணக்கு) தொடரும்”” என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 575)

وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، أَنَّهُ قَالَ

جَاءَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فِي بَنِي مُعَاوِيَةَ، وَهِيَ قَرْيَةٌ مِنْ قُرَى الْأَنْصَارِ، فَقَالَ: هَلْ تَدْرُونَ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِكُمْ هَذَا؟ فَقُلْتُ لَهُ: نَعَمْ، وَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنْهُ. فَقَالَ: هَلْ تَدْرِي مَا الثَّلَاثُ الَّتِي دَعَا بِهِنَّ فِيهِ؟ فَقُلْتُ: نَعَمْ، قَالَ: فَأَخْبِرْنِي بِهِنَّ. فَقُلْتُ: «دَعَا بِأَنْ لَا يُظْهِرَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ. وَلَا يُهْلِكَهُمْ بِالسِّنِينَ. فَأُعْطِيَهُمَا. وَدَعَا بِأَنْ لَا يَجْعَلَ بَأْسَهُمْ بَيْنَهُمْ. فَمُنِعَهَا» قَالَ: صَدَقْتَ، قَالَ ابْنُ عُمَرَ فَلَنْ يَزَالَ الْهَرْجُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-575.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.