தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-62

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஈராக்கில் இருந்து வந்தார்கள். அவர்களிடம் அபு தல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) இருவரும் வந்தனர். அவ்விருவருக்கும் சமைக்கப்பட்ட உணவு தரப்பட்டது. அதை (மூவரும்) சாப்பிட்டார்கள். அனஸ் அவர்கள் எழுந்து ஒளுச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா அவர்களும், உஸை இப்னு கஹ்பு(ரலி), ”இது என்ன அனஸே..! ஈராக் நாட்டின் செயலா?”” என்று கேட்டனர். ”நான் அப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாம்”” என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அபூதல்ஹா(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) ஆகிய இருவரும் எழுந்து, ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள். இதை அப்துர் ரஹ்மான் இப்னு ஸைதுல் அன்சாரி கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 62)

وَحَدَّثَنِي عَنْ مالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ الْأَنْصَارِيِّ

أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ قَدِمَ مِنَ الْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ فَقَرَّبَ لَهُمَا طَعَامًا قَدْ مَسَّتْهُ النَّارُ، فَأَكَلُوا مِنْهُ. فَقَامَ أَنَسٌ فَتَوَضَّأَ فَقَالَ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ مَا هَذَا يَا أَنَسُ أَعِرَاقِيَّةٌ؟ فَقَالَ أَنَسٌ: «لَيْتَنِي لَمْ أَفْعَلْ». وَقَامَ أَبُو طَلْحَةَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ، فَصَلَّيَا وَلَمْ يَتَوَضَّآَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-62.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.