தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-69

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து பின்பு தொழுகையை விரும்பியவராக வந்தால், அவர் தொழுகையை விரும்பி வரும் வரை தொழுகையில் உள்ளவர் போலாவார். அவாரின் காலடி எட்டுக்களில் ஒன்றுக்கு அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். மற்றொரு அடிக்கு ஒரு தீமை அவரை விட்டும் அழிக்கப்படும். உங்களில் ஒருவர் இகாமத் கூறுவதைக் கேட்டால் அவர் விரைந்து வர வேண்டாம். கூலி பெறுவதில் உங்களில் மேன்மையானவர், வீட்டால் உங்களில் தூரமாக இருப்பவரே என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ”அபூஹுரைரா அவர்களே! ஏன் இப்படி? என்று மக்கள் கேட்டனர். ‘அதிகமான காலடிகள் தான் காரணம்” என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். இதை நுஐம் இப்னு அப்துல்லா மதனி அல் முஜ்மிரி கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 69)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمَدَنِيِّ الْمُجْمِرِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ

«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الصَّلَاةِ، فَإِنَّهُ فِي صَلَاةٍ مَادَامَ يَعْمِدُ إِلَى الصَّلَاةِ. وَإِنَّهُ يُكْتَبُ لَهُ بِإِحْدَى خُطْوَتَيْهِ حَسَنَةٌ، وَيُمْحَى عَنْهُ بِالْأُخْرَى سَيِّئَةٌ. فَإِذَا سَمِعَ أَحَدُكُمُ الْإِقَامَةَ فَلَا يَسْعَ. فَإِنَّ أَعْظَمَكُمْ أَجْرًا أَبْعَدُكُمْ دَارًا»، قَالُوا: لِمَ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: «مِنْ أَجْلِ كَثْرَةِ الْخُطَا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-69.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.