தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-80

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூபாவின் தலைவரான ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் வந்த போது, அவர்கள் தன் காலுறைகள் மீது மஸஹ் செய்வதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் பார்த்து விட்டு, அவர்களிடம் இதை ஆட்சேபித்தார்கள். ‘உன் தந்தை (உமர்) அவர்களிடம் சென்றால் அவரிடம் கேள்” என்று ஸஃது(ரலி) அவர்கள் கூறினார்கள். ஸஃது(ரலி) அவர்கள் (கூபாவிலிருந்து மதீனாவிற்கு) வரும் வரை இ விஷயமாக தன் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் கேட்க, அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் மறந்து விட்டார்கள். உன் தந்தையிடம் கேட்டீரா? என்று ஸஃது(ரலி) அவர்கள் கேட்கவும், இல்லை என்று கூறினார்கள்.

அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் தந்தையிடம் (இது விஷயமாக) கேட்க, ‘உன் கால்களை சுத்தமான நிலையில் காலுறைகளுக்குள் நுழைத்தால் அவ்விரண்டின் மீது மஸஹ் செய்து கொள்” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். மலம் ஜலம் கழிக்கப் போய் வந்தாலுமா? என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கேட்க, மலம் ஜலம் கழிக்கப் போய் வந்தாலும் தான் என பதில் கூறினார்கள். இதை நாபிஉ, அப்துல்லா இப்னு தீனார் இருவரும் கூறுகின்றார்கள்.

(இச்சம்பவம் வேறு வார்த்தைகளால் புகாரி, நஸயீ யில் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 80)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّهُمَا أَخْبَرَاهُ

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَدِمَ الْكُوفَةَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَهُوَ أَمِيرُهَا، فَرَآهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ. فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ، فَقَالَ لَهُ سَعْدٌ: سَلْ أَبَاكَ إِذَا قَدِمْتَ عَلَيْهِ. فَقَدِمَ عَبْدُ اللَّهِ، فَنَسِيَ أَنْ يَسْأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ، حَتَّى قَدِمَ سَعْدٌ. فَقَالَ: أَسَأَلْتَ أَبَاكَ؟ فَقَالَ: لَا. فَسَأَلَهُ عَبْدُ اللَّهِ، فَقَالَ عُمَرُ: «إِذَا أَدْخَلْتَ رِجْلَيْكَ فِي الْخُفَّيْنِ، وَهُمَا طَاهِرَتَانِ، فَامْسَحْ عَلَيْهِمَا»، قَالَ عَبْدُ اللَّهِ: وَإِنْ جَاءَ أَحَدُنَا مِنَ الْغَائِطِ؟ فَقَالَ عُمَرُ: «نَعَمْ. وَإِنْ جَاءَ أَحَدُكُمْ مِنَ الْغَائِطِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-80.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.