பாடம் 21
மதீ எனும் இச்சை நீருக்கு ஒளுச் செய்தல்
ஒருவர் தன் மனைவியிடம் நெருங்கி இருக்கிறார். அப்போது, மதீ வெளியாகியது. இவர் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை நபி(ஸல்) அவர்களிடம் கேட்கும்படி, என்னிடம் நபி(ஸல்) அவர்களின் மகள் (மனைவியாக) இருப்பதால் நான் இக்கேள்வி கேட்க வெட்கப்படுவதாகவும் அலீ(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ”உங்களில் ஒருவர் இந்த நிலையை அடைந்தால் மறைவுறுப்பில் தண்ணீர் தெளித்து விட்டு, தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்யட்டும்”” என்று (பதில்) கூறினார்கள். இதை மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இதே கருத்து புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ யில் உள்ளது).
(முஅத்தா மாலிக்: 95)21- بَابُ الْوُضُوءِ مِنَ الْمَذْيِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ
أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَمَرَهُ أَنْ يَسْأَلَ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ، إِذَا دَنَا مِنْ أَهْلِهِ، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ، مَاذَا عَلَيْهِ؟ قَالَ: عَلِيٌّ فَإِنَّ عِنْدِي ابْنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَسْتَحِي أَنْ أَسْأَلَهُ، قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَنْضَحْ فَرْجَهُ بِالْمَاءِ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-95.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்