அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(நஸாயி: 1091)أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ مِنْ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ وَلَا يَبْرُكْ بُرُوكَ الْبَعِيرِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1079.
Nasaayi-Shamila-1091.
Nasaayi-Alamiah-1079.
Nasaayi-JawamiulKalim-1078.
- ஸஜ்தாவிற்கு செல்லும் போது முதலில் கைகளை வைப்பதா? அல்லது மூட்டுக்கால்களை வைப்பதா? என்பதில், சிலர் கைகளை வைக்க வேண்டும் என்றும் சிலர் மூட்டுகால்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
1 . முதலில் மூட்டுக் கால்களை வைக்க வேண்டும் என்று சொல்பவர்கள் மேற்கண்ட ஹதீஸுக்கு மாற்றமாக வரும் ஹதீஸ்களை ஆதாரமாக காட்டுகின்றனர்.
2 . மேலும் ஒட்டகம் முதலில் முன்னங்கால்களை வைத்து தான் அமரும். அது அதற்கு கையைப்போன்று என்பதால் நாம் முதலில் கைகளை வைக்ககூடாது. மூட்டுக்கால்களை தான் வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த அறிவிப்பில், அறிவிப்பாளர் முதலில் கைகளை வைக்க வேண்டும் என்று தவறாக அறிவித்துவிட்டார் என்றும் கூறுகின்றனர்.
1 . ஆனால் முதலில் மூட்டுக்கால்களை வைக்க வேண்டும் என்று சொல்பவர்கள் மேற்கண்ட கருத்தில் வரும் ஹதீஸ்களை ஆதாரமாக காட்டுகின்றனர்.
2 . மேலும் விலங்குகளுக்கு பின்னங்கால்கள் தான் கைகளைப் போன்றது என விலங்கியலைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர். அவைகளின் செயல்களை வைத்தே இதை தெரிந்துக் கொள்ளலாம். முன்னங்கால்கள் அதற்கு கால்களைப் போன்றாகும். எனவே ஒட்டகத்தின் முன்னங்கால்கள் கால்களைப் போன்றதாகும் என்பதால் நாம் முதலில் கைகளை தான் வைக்க வேண்டும்; இந்த செய்தியை அறிவிப்பாளர் மாற்றி அறிவிக்கவில்லை என்று கூறுகின்றனர்.
அபூஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் முதலில் கால்களை வைக்க வேண்டும் என்று வந்திருந்தாலும் அவை பலவீனமானவை என்று கூறுகின்றனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8955 , தாரிமீ-1360 , அபூதாவூத்-840 , 841 , திர்மிதீ-269 , நஸாயீ-1090 , 1091 , குப்ரா நஸாயீ-681 , 682 , தாரகுத்னீ-1304 , 1305 , குப்ரா பைஹகீ-2633 , 2634 , 2636 ,
2 . அபூஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2702 , முஸ்னத் அபீ யஃலா-6540 , குப்ரா பைஹகீ-2635 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-268 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-901 ,
சமீப விமர்சனங்கள்