ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் அலீ (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னை விட அது பற்றி அவர்கள் நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.
ஆகவே, நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்று மஸஹ் செய்வது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உள்ளூரில் வசிப்பவர் ஒரு பகலும், இரவும் (அதாவது 24 மணி நேரம்) மஸஹ் செய்யவும், பயணி மூன்று நாட்களும் (அதாவது 72 மணி நேரம்) மஸஹ் செய்யவும் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
(நஸாயி: 129)أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ قَالَ:
سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ: ائْتِ عَلِيًّا؛ فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي. فَأَتَيْتُ عَلِيًّا فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ، فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا أَنْ يَمْسَحَ الْمُقِيمُ يَوْمًا وَلَيْلَةً، وَالْمُسَافِرُ ثَلَاثًا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-129.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்