தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1321

A- A+


ஹதீஸின் தரம்: More Info

பாடம் :

இடதுபுறம் ஸலாம் கொடுக்கும் முறை.

வாஸிஃ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படி இருந்தது என எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் முறைப் பற்றி கூறினார்கள்.

பிறகு வலது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்றும், இடது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் கூறுவார்கள்’ என பதிலளித்தார்கள்.

(நஸாயி: 1321)

كَيْفَ السَّلَامُ عَلَى الشِّمَالِ؟

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ قَالَ:

قُلْتُ لِابْنِ عُمَرَ: أَخْبِرْنِي عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ كَانَتْ؟ قَالَ: ” فَذَكَرَ التَّكْبِيرَ، قَالَ: يَعْنِي وَذَكَرَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَمِينِهِ، السَّلَامُ عَلَيْكُمْ عَنْ يَسَارِهِ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1321.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1305.




إسناده حسن رجاله ثقات عدا عبد العزيز بن محمد الدراوردي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மது நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இவர் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் வேறு அறிவிப்பாளருடன் சேர்த்து அறிவித்துள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.