அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரையாற்றும்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(தொழுது) சலாம் கொடுத்தவுடன்
“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.
லா இலாஹ இல்லல்லாஹு, லா நஅபுது இல்லா இய்யாஹு அஹ்லுந் நிஅமத்தி வல் ஃபள்லி வஸ்ஸனாஇல் ஹசன். லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்”
(அல்லாஹவைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. வழிபாட்டை முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம் (அவனது திருப்திக்காகவே அனைத்து அறங்களையும் செய்கிறோம்); இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே)
என்று கூறுவார்கள் என அறிவித்தார்கள்.
(நஸாயி: 1339)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْمَرُّوذِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ الْحَجَّاجِ بْنِ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، قَالَ:
سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُحَدِّثُ عَلَى هَذَا الْمِنْبَرِ، وَهُوَ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، أَهْلَ النِّعْمَةِ وَالْفَضْلِ وَالثَّنَاءِ الْحَسَنِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1339.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1323.
சமீப விமர்சனங்கள்