தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-17

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

முஃகீரா பின் ஷுஉபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடினால், தொலைவாகச் சென்று விடுவார்கள். இவ்வாறு (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் தமது பயணத்தில் (வழியில்) மலம்- சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றார்கள். அப்போது, அங்கத்தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டு வருவீராக!” என்று என்னிடம் கூறினார்கள். எனவே நான், அவர்களுக்கு அங்கத்தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டு சென்றேன். அங்கத்தூய்மை செய்த பின், அவர்கள் தம் காலுறைகளின் மேல் ‘மஸஹ்’ செய்தார்கள்.

அஷ்ஷைக் நஸாயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் இஸ்மாயீல் என்பவர், இஸ்மாயீல் பின் ஜஃபர் பின் அபூகஸீர் அல்காரீ ஆவார்.

(நஸாயி: 17)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ. قَالَ: فَذَهَبَ لِحَاجَتِهِ وَهُوَ فِي بَعْضِ أَسْفَارِهِ فَقَالَ: «ائْتِنِي بِوَضُوءٍ، فَأَتَيْتُهُ بِوَضُوءٍ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ»

قَالَ الشَّيْخُ: إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ الْقَارِئُ


Nasaayi-Tamil-17.
Nasaayi-TamilMisc-17.
Nasaayi-Shamila-17.
Nasaayi-Alamiah-17.
Nasaayi-JawamiulKalim-17.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.