தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3650

A- A+


ஹதீஸின் தரம்: Pending

ஷுரஹ்பீல் பின் ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்கு சென்றுவிட்டார்கள். மதீனாவில் இருந்த அவர்களின் தாயாருக்கு மரணவேளை ஏற்பட்ட போது அவர்களிடம் தர்மம் செய்வதற்கு வஸிய்யத் செய்யுங்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர், செல்வம் ஸஅதுக்கு சொந்தமானது. நான் எதில் நான் வஸிய்யத் செய்வது என்று மறுத்துவிட்டார். ஸஅது அவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார். ஸஅது அவர்கள் வந்தபின் இது பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நான் என் தாயாரின் சார்பாக தர்மம் செய்வது அவருக்கு பயனளிக்குமா? என்று  நபி அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். எனவே ஸஅது அவர்கள் இன்னின்ன தோட்டங்கள் அவரின் நன்மைக்காக தர்மம் செய்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

(நஸாயி: 3650)

أَنْبَأَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ بْنِ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:

خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، وَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ، فَقِيلَ لَهَا: أَوْصِي، فَقَالَتْ: فِيمَ أُوصِي؟ الْمَالُ مَالُ سَعْدٍ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ، فَلَمَّا قَدِمَ سَعْدٌ ذُكِرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ»، فَقَالَ سَعْدٌ: حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَنْهَا، لِحَائِطٍ سَمَّاهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3650.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3609.




إسناد ضعيف لأن به موضع إرسال ، وباقي رجاله ثقات وصدوقيين عدا شرحبيل بن سعيد الأنصاري وهو مقبول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஷுரஹ்பீல் பின் ஸயீத் (ரஹ்) அவர்களுக்கும், ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-22458 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.