ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) ஏற்பாடு செய்ததாகும்.
அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)
(நஸாயி: 3666)أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، عَنْ حَجَّاجٍ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، يُحَدِّثُ عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يُحَدِّثُ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ:
أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» فَتِلْكَ سِقَايَةُ سَعْدٍ بِالْمَدِينَةِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3666.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3625.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்), ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-22458 .
சமீப விமர்சனங்கள்