தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1039

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “உங்கள் சகோதரர் நஜ்ஜாஷீ இறந்துவிட்டார். ஆகவே, நீங்கள் எழுந்து அவருக்காக (ஜனாஸாத்) தொழுகை நடத்துங்கள்” என்று கூறினார்கள்.

இம்ரான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் எழுந்தோம். பின்னர், இறந்தவருக்காக வரிசையாக அணிவகுப்பது போல அணிவகுத்தோம். மேலும், இறந்தவருக்காகத் தொழுவது போல அவருக்காகத் தொழுதோம்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அபூஸயீத் (ரலி), ஹுதைஃபா பின் அஸீத் (ரலி), ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோரிர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மேலும் இந்தச் செய்தியை அபூகிலாபா (ரஹ்) அவர்கள், தனது தந்தையின் சகோதரரான அபுல்முஹல்லப் (ரஹ்) அவர்களிடமிருந்து, அபுல்முஹல்லப் —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

அபுல்முஹல்லப் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் “அப்துர்ரஹ்மான் பின் அம்ர்” ஆகும். இவருக்கு “முஆவியா பின் அம்ர்” என்றும் ஒரு பெயர் (சிலரால்) கூறப்படுகிறது.

(திர்மிதி: 1039)

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ، وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَا: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي المُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ:

قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَاكُمُ النَّجَاشِيَّ قَدْ مَاتَ، فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ»، قَالَ: فَقُمْنَا، فَصَفَفْنَا كَمَا يُصَفُّ عَلَى المَيِّتِ، وَصَلَّيْنَا عَلَيْهِ كَمَا يُصَلَّى عَلَى المَيِّتِ

وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَأَبِي سَعِيدٍ، وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ، وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ.: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»، وَقَدْ رَوَاهُ أَبُو قِلَابَةَ، عَنْ عَمِّهِ أَبِي المُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، ” وَأَبُو المُهَلَّبِ: اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، وَيُقَالُ لَهُ: مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1039.
Tirmidhi-Alamiah-960.
Tirmidhi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1738.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.