தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1052

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

கப்ருகள் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதாகும். மேலும் இந்தச் செய்தி ஜாபிர் (ரலி) வழியாக பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸன் பஸரீ போன்ற சில கல்வியாளர்கள் மண்ணால் பூசுவது கூடும் என்று கூறியுள்ளனர். இவ்வாறே ஷாஃபிஈ இமாம் அவர்கள் மண்ணால் பூசுவது தவறல்ல என்று கூறியுள்ளார்.

(திர்மிதி: 1052)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ

«نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ ” وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ العِلْمِ مِنْهُمْ: الحَسَنُ البَصْرِيُّ، فِي تَطْيِينِ القُبُورِ “، وقَالَ الشَّافِعِيُّ: «لَا بَأْسَ أَنْ يُطَيَّنَ القَبْرُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-972.
Tirmidhi-Shamila-1052.
Tirmidhi-Alamiah-972.
Tirmidhi-JawamiulKalim-970.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.