தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1074

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால்  அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(திர்மிதி: 1074)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو عَامِرٍ العَقَدِيُّ، قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الجُمُعَةِ أَوْ لَيْلَةَ الجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ القَبْرِ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ». ” وَهَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ رَبِيعَةُ بْنُ سَيْفٍ، إِنَّمَا يَرْوِي عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَلَا نَعْرِفُ لِرَبِيعَةَ بْنِ سَيْفٍ سَمَاعًا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-994.
Tirmidhi-Shamila-1074.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-992.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين ربيعة بن سيف المعافري وعبد الله بن عمرو السهمي ، وباقي رجاله ثقات وصدوقيين عدا ربيعة بن سيف المعافري وهو مقبول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ரபீஆ பின் ஸைஃப், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என திர்மிதீ இமாம் அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • மேலும் இவர் நிராகரிக்கப்படும் செய்திகளை அறிவித்துள்ளார் என புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    போன்ற அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல் : இக்மாலு தஹ்தீபில் கமால் 4/349)

وقال البخاري في «تاريخه الأوسط» و«الصغير» : في فصل من مات من عشر ومائة إلى عشرين : ربيعة بن سيف الإسكندراني ، روى أحاديث لا يتابع عليها ، وفي موضع آخر : منكر الحديث .
إكمال تهذيب الكمال: (4 / 349)

மேலும் பார்க்க : அஹ்மத்-6582 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.