தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1489

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் அவர்களின் முகத்தில் (வெயில்படாமலிருக்க)  மரக்கிளைகளை பிடித்திருந்தவர்களில் நானும் ஒருவனாவேன்.

அந்த உரையில் அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும்  (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

நாயை கட்டி வைத்திருக்கும் வீட்டார்களின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் நன்மை) குறைந்து போய்விடும்; வேட்டையாடுவதற்காகவோ அல்லது விவசாயப் பண்ணைகளை பாதுகாப்பதற்காகவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ளதாகும். இந்த செய்தி ஹஸன் பஸரீ அவர்களின் வழியாக வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

(திர்மிதி: 1489)

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ القُرَشِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ:

إِنِّي لَمِمَّنْ يَرْفَعُ أَغْصَانَ الشَّجَرَةِ عَنْ وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، فَقَالَ: «لَوْلَا أَنَّ الكِلَابَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا، فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ، وَمَا مِنْ أَهْلِ بَيْتٍ يَرْتَبِطُونَ كَلْبًا إِلَّا نَقَصَ مِنْ عَمَلِهِمْ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ، إِلَّا كَلْبَ صَيْدٍ، أَوْ كَلْبَ حَرْثٍ، أَوْ كَلْبَ غَنَمٍ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1489.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1405.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உபைத் பின் அஸ்பாத் சுமாரானவர் என்பதால் திர்மிதீ இமாம் அவர்கள் இந்த செய்தியை ஹஸன் என்று குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தில் பலமான செய்தியும் உள்ளது.

பார்க்க : திர்மிதீ-1486 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.