அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்டு மந்தைக்குள் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்கள் அந்த மந்தையிலுள்ள ஆடுகளை(த் தாக்கி) அழிப்பதைவிட, ஒரு மனிதனுக்குச் செல்வத்தின் மீதும் செல்வாக்கின் மீதுமுள்ள பேராசையானது, அவனது மார்க்கத்தை மிகவும் அழிக்கக்கூடியதாகும்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
இப்பாடப் பொருள் சம்பந்தமான ஹதீஸ் இப்னு உமர் (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல.
(திர்மிதி: 2376)حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ المَرْءِ عَلَى المَالِ وَالشَّرَفِ لِدِينِهِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَيُرْوَى فِي هَذَا الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا يَصِحُّ إِسْنَادُهُ
Tirmidhi-Tamil-2298.
Tirmidhi-TamilMisc-2298.
Tirmidhi-Shamila-2376.
Tirmidhi-Alamiah-2298.
Tirmidhi-JawamiulKalim-2310.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . ஸுவைத் பின் நஸ்ர்
3 . அப்துல்லாஹ் பின் முபாரக்
4 . ஸகரிய்யா பின் அபூஸாயிதா
4 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் பின் ஸுராரா
5 . இப்னு கஅப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அல்அன்ஸாரீ
6 . அவரது தந்தை (கஅப் பின் மாலிக்-ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16102-ஸகரிய்யா பின் அபூஸாயிதா அவர்கள் பற்றி அபூஸுர்ஆ அவர்கள், இவர் ஷஅபீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தான் அதிகம் தத்லீஸ் உள்ளது கூறியுள்ளார்.
- அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் ஷஅபீ, இப்னு ஜுரைஜ் ஆகியோரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் உள்ளது கூறியுள்ளார். - அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள் மூளைக் குழம்பியபின் தான் இவர் அபூஇஸ்ஹாக் அவர்களிடம் செவியேற்றார் என்று இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் கூறியுள்ளார். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.
….
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/593, தஹ்தீபுல் கமால்-9/359, அல்இக்மால்-5/64, அல்காஷிஃப்-2/420, தாரீகுல் இஸ்லாம்-3/864, ஸியரு அஃலாமின் நுபலா-6/202, தஹ்தீபுத் தஹ்தீப்-1/631, தக்ரீபுத் தஹ்தீப்-1/338, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-2022, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/133…)
எனவே இவர் பற்றிய விமர்சனம் இந்த 2 பேரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளின் அடிப்படையில் கூறப்பட்டதாகும். எனவே இவர் சிறிது பலவீனமானவர் என்றும், தத்லீஸ் செய்பவர் என்றும் பொதுவாக சிலர் கூறிய விமர்சனம் சரியானதல்ல.
இந்தச் செய்தி விமர்சிக்கப்பட்ட வகையைச் சேர்ந்த செய்தி அல்ல என்பதால் இது சரியான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் கஅப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) வழியாக வரும் செய்தியே சரியானதாகும்.
1 . இந்தக் கருத்தில் கஅப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-15784, 15794, தாரிமீ-2772, திர்மிதீ-2376, குப்ரா நஸாயீ-11796, இப்னு ஹிப்பான்-3228, அல்முஃஜமுல் கபீர்-189, …
….
தமிழாக்கத்தில் விடுபட்டுல்லது-
செல்வத்தினிலும் மரியாதையினிலும் மீதுள்ள பேராசை
அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸாகல்லாஹு கைரா. மரியாதை என்பதற்கு செல்வாக்கு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.