தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2676

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 16

நபிவழியைக் கடைப் பிடிக்குமாறும் (மார்க்க அடிப்படையற்ற) நூதனமான செயல்களைக் கைவிடுமாறும் வந்துள்ளவை.

2600. இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் அதிகாலைத் தொழுகைக்குப் பின் எங்களிடையே சொற்சுவைமிக்க
சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு எங்கள் கண்கள் கண்ணீரைச் சிந்தின; (எங்கள்) உள்ளங்கள் எல்லாம் அஞ்சி நடுங்கின. அப்போது ஒரு மனிதர் “இது விடைபெற்றுச் செல்லும் ஒருவர் கூறும் அறிவுரை போன்றுள்ளது. அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களிடம் இறுதி விருப்பமாக என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இறைவனை அஞ்சுமாறும்; கறுப்பு நிற (நீக்ரோ) அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக ஆக்கப்பட்டாலும் அவருடைய சொல்லைச் செவியேற்று அதற்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும்
உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.

ஏனெனில், உங்களில் எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். (மார்க்கத்தில் புகுத்தப்படும்) புதுமைகளிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில்
(மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்படுகின்றவை யாவும் வழிதவறச் செய்யக்கூடியவையாகும்.

(மார்க்க அடிப்படையற்ற) இவ்விஷயங்களை சந்திக்கும் உங்களில் ஒருவர் எனது வழிமுறையையும் நல்வழி காட்டப்பெற்ற நேர்வழி கலீஃபாக்களின் வழிமுறையையும் கடைப்பிடிக்கட்டும். அந்த வழிமுறையைக் கடைவாய்ப் பற்களால் இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அம்ர் (ரஹ்).

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

இக்கருத்தில் அமைந்த நபிமொழி இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. இக்கருத்தில் அமைந்த நபிமொழி இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடமிருந்து மேலும், பல அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

இர்பாள் பின் ஸாரியா அவர்களின் இயற்பெயர் அபூநஜீஹ் என்பதாகும்.

இந்த ஹதீஸ் இர்பாள் பின் ஸாரியா அவர்களிடமிருந்து ஹுஜ்ர் பின் ஹுஜ்ர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 2676)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ العِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ

وَعَظَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلاَةِ الغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا العُيُونُ وَوَجِلَتْ مِنْهَا القُلُوبُ، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أُوصِيكُمْ بِتَقْوَى اللهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلاَفًا كَثِيرًا، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّهَا ضَلاَلَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
وَقَدْ رَوَى ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ العِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا، حَدَّثَنَا بِذَلِكَ الحَسَنُ بْنُ عَلِيٍّ الخَلاَّلُ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ العِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ وَالعِرْبَاضُ بْنُ سَارِيَةَ يُكْنَى أَبَا نَجِيحٍ.
وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ حُجْرِ بْنِ حُجْرٍ، عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.


Tirmidhi-Tamil-2600.
Tirmidhi-TamilMisc-2600
Tirmidhi-Shamila-2676.
Tirmidhi-JawamiulKalim-2619.




إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات عدا عبد الرحمن بن عمرو السلمي وهو مقبول (الجوامع الكلم)

மேலும் பார்க்க: அஹ்மத்-17142 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.