தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2833

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நல்ல பெயர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(திர்மிதி: 2833)

بَابُ مَا جَاءَ مَا يُسْتَحَبُّ مِنَ الأَسْمَاءِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو الوَرَّاقُ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ الرَّقِّيُّ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2833.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2778.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25034-அப்துல்லாஹ் பின் உஸ்மான் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள், இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும், அபூஜஃபர் தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    அவர்கள், இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/383),
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரைப்பற்றி தக்ரீபுத் தஹ்தீபில் ஸதூக் என்ற தரத்தில் கூறியிருந்தாலும், பிறகு லிஸானுல் மீஸானில் இவரைப்பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறுகின்றனர் என்ற கருத்துவேறுபாட்டை தெரிவித்துள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 9/342)
  • மேலும் இதில் வரும் ராவீ-29994-அலீ பின் ஸாலிஹ் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் மக்பூல் என்ற தரத்தில் சேர்த்துள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/698)

எனவே சிலரின் பார்வையில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். சிலரின் பார்வையில் ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-4320 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.