கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் அஹ்லுபைத் இருந்தனர். அவர்களுக்கு (பனூ உபைரிக்) உபைரிகின் மக்கள்; பிஷ்ர், புஷைர், முபஷ்ஷிர் என்று சொல்லப்படும். அதில் புஷைர் என்பவர் (முனாஃபிக்) நயவஞ்சகராக இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களையும் ‘அரப்’களில் சிலரையும் இகழ்ந்து கவிபாடுவார். பின்பு இன்னவர் இப்படி, இப்படிப்பட்டவர்; இன்னவர் இப்படி, இப்படிப்பட்டவர் என்று (குறை) கூறித்திரிவார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்தக் கவிதையைக் கேட்டாலே “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்தக் கவிதையை அந்த ஃகபீஸ் (ஷைத்தான்) அல்லது (அந்த மனிதன் என்று உபைரிக் மகனை) அவன்தான் கூறியிருப்பான் என்று கூறுவார்கள். பனூ உபைரிகின் மக்கள் அறியாமையி (காலத்தி)லும் இஸ்லாத்தை ஏற்ற பின்னும் வறுமையிலும், தேவையுடையவர்களாகவும் இருந்தார்கள். மதீனாவில் மக்களின் உணவு பேரீத்தம்பழமும், தொலிக்கோதுமையுமாக இருந்தன. அந்த (உபைரிக் மகன்) மனிதன் வசதியாக இருந்ததால் ஷாமிலிருந்து உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து, விற்பனை செய்யும் பொதிவியாபாரியிடம் தனக்காக மாவை வாங்கிக் கொண்டான்.
அறிந்துகொள்ளுங்கள்.
குடும்பத்தார்களின் உணவு பேரீத்தம்பழமும், தொலிக்கோதுமையுமாகும். ஷாமிலிருந்து பொதிவியாபாரி (உணவுகளை) கொண்டுவந்திருந்தான். (அவனிடம்) எனது சிறிய தந்தை ரிஃபாஆ பின் ஸைத் மாவுப்பொதியை வாங்கி அவருக்குச் சொந்தமான அறையில் வைத்துக்கொண்டார். அந்த அறையில் ஆயுதம், வாள், உருக்குச் சட்டை (பாதுகாப்புக் கவசம்) இருந்தன. வீட்டுக்குக் கீழ் துளையிடப்பட்டு அறையிலிருந்த உணவுப் பொருள்களும் ஆயுதங்களும்
களவாடப்பட்டுவிட்டன. (மறுநாள்) காலையில் எனது சிறிய தந்தை ரிஃபாஆ என்னிடம் வந்து எனது சகோதரனின் மகனே! இன்றைய இரவு நமது அறை துளையிடப்பட்டு நமது உணவுப் பொருள்களும் ஆயுதங்களும் களவாடப்பட்டுள்ளன. வீட்டிலேயே தேடி விசாரித்தோம். அப்போது இன்றைய இரவு உபைரிகின் மக்கள்தான் அடுப்பு மூட்டி (சமைத்)தனர். அதில் உங்களின் உணவையே கண்டோம் என்று எங்களுக்கு (தகவல்) சொல்லப்பட்டது.
பனூ உபைரிகின் மக்களும், “நாங்களும் வீட்டில் விசாரித்தோம் அல்லாஹ்வின் மீது ஆணையாக! லபீத் பின் ஸஹ்ல் உங்களது தோழர்; நம்மில் ஒருவர். அவர் நல்லவர்; இஸ்லாமிய(வழி நடப்பவ)ர் என்று கூறினர். இதை லபீத் பின் ஸஹ்ல் செவிமடுத்தபோது தனது வாளைச் சுழற்றி நான் திருடினேனா?
அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த வாள் உங்களோடு உறவாடும். அல்லது இந்தத் திருட்டை (செய்தது எவர் என்று) தெளிவுபடுத்தும் என்று (ஆவேசமாக) கூறினார். அப்போது உபைரிகின் மக்கள் “ஆடவரே! இச்செய்தியை உம்மிடம் (கூறினோம்) நீ திருட்டுக்குரியவருமல்ல; நாங்கள் வீட்டில் விசாரித்தோம். அவர்க(உபைரிகின் மக்க)ளையும் நாங்கள் திருடியவர்கள் என்று சந்தேகிக்கவுமில்லை” என்று கூறினார்கள். எனவே என் சிறிய தந்தை என்னிடம் “சகோதரனின் மகனே! நீ அல்லாஹ்வின் தூதரிடத்தில் சென்று இது குறித்து அவர்களிடத்தில் முறையிடு” என்று கூறினார்.
கதாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “நம்மில் தாய், தந்தையருக்கு பணிவிடை செய்யாத, உறவுகளைப் பேணாத அஹ்லுபைத்துகள், வேண்டுமென்றே என் சிறிய தந்தை ரிஃபாஆ பின் ஸைத் அவர்களின் வீட்டின் அறையைத் துளையிட்டு ஆயுதத்தையும் உணவையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். எங்களின் ஆயுதத்தைத் திருப்பித் தரச்சொல்லுங்கள். அறிந்துகொள்ளுங்கள்! உணவு எங்களுக்குத் தேவையில்லை.
“நபி (ஸல்) அவர்கள் “இது குறித்து (விசாரிக்க) உத்தரவிடுகிறேன்” என்று கூறினார்கள். (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் விசாரித்ததை) ‘உபைரிக்கின் மக்கள் செவிமடுத்தபோது அவர்களில் ஒருவர் வந்தார். அவர் உஸைர் பின் உர்வா ஆவார். அவரிடத்தில் இது குறித்து பேசினர். பின்பு வீட்டினர் அனைவரும் இது தொடர்பாக (பேசி முடிவெடுத்து) ஒன்று சேர்ந்து வந்து “அல்லாஹ்வின் தூதரே! திண்ணமாக கதாதா பின் நுஃமான், அவருடைய சிறிய தந்தை இருவரும் வேண்டுமென்றே இஸ்லாமிய நல்லவர்களான அஹ்லு பைத்துகளை ஆதாரமோ சாட்சியோ இல்லாமல் திருட்டுக் குற்றம் சுமத்துகிறார்கள்” என்று கூறினார்கள்.
கதாதா (ரலி) அவர்கள் (தமது சிறிய தந்தையிடம் திரும்பிவந்து) நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் சென்று இதைப் பேசினேன். அப்போது அவர்கள், “நீங்கள்தான் நல்லவர்களான இஸ்லாமியர்களை ஆதாரமும் சாட்சியுமின்றி திருட்டுக் குற்றம் சுமத்துகிறீர்கள்” என்று கூறினார்கள். எனவே நான் சென்று எனது பொருளிலிருந்து (எடுத்து வந்து) தர விரும்புகிறேன். இனி இது குறித்து அல்லாஹ்வின் தூதரிடத்தில் நான் பேசமாட்டேன் என்று கூறினேன். அப்போது எனது சிறிய தந்தை ரிஃபாஆ, ‘எனது சகோதரனின் மகனே! என்ன காரியம் செய்யப்போகிறாய்?’ என்று கூறினார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் என்னிடம் கூறியதைச் சொன்னேன். அல்லாஹ்வே உதவி தேடத் தகுதியானவன் என்று கூற சிறிது நேரமும் தாமதமின்றி,
“(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம்மீது இறக்கினோம். (ஆகவே) நீர் மோசடிக்காரர்களு(உபைரிக் மக்களு)க்கு தர்கிப்பவராக இருக்காதீர்! (அல்குர்ஆன்: 4:105)
(கதாதா அவர்களிடம் நீங்கள் பேசியதில் தவறு ஏற்பட்டிருப்பதால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனாகவும் மிகக் கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:106)
(நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத் தாமே சதி செய்து கொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம்) மன்னிப்பைக் கோரி) நீர் தர்கிக்கவேண்டாம். ஏனென்றால் எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை (அல்குர்ஆன்: 4:107)
இவர்கள் (சதி செய்யும் தம் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும் (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்து விடமுடியாது. (அல்லாஹ்) விரும்பாத விசயங்களைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்து கொண்டும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:108)
“நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமை நாளில்
இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவர் யார்? இன்னும் (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவர் யார்? (அல்குர்ஆன்: 4:109)
“எவரேனும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி உண்மையாகவே கைசேதப்பட்டு) அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் (அவனுடைய குற்றங்களை)மிக மன்னிப்பவனாகவும் (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான். (அல்குர்ஆன்: 4:110)
அதாவது அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோரினால் அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பை அருளுவான்.
“எவர் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக ஞானமுடையவனாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்: 4:111)
“எவரேனும் ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லை என்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்.” (அல்குர்ஆன்: 4:112)
“(நபியே!) அல்லாஹ்வின் அருளும் அவனது கிருபையும் உம்மீது இல்லாதிருந்தால் (நீர் தவறிழைத்திருக்கக்கூடும். ஏனென்றால், (எந்த விதத்திலும்) உம்மை வழிகெடுத்துவிட வேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும் அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்கவில்லை. அவர்கள் உமக்குக் கொஞ்சமும் தீங்கிழைத்துவிட முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கி நீங்கள் அறியாத அனைத்தையும் உமக்குக் கற்பித்துக் கொடுத்தான். உம்மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கிறது.” (அல்குர்ஆன்: 4:113)
(நபியே!) தருமத்தைக் கொண்டோ, அல்லது நன்மையைக் கொண்டோ, அல்லது மக்களுக்கு மத்தியில் சமாதானத்தைக் கொண்டோ ஏவுகின்றவரைத் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சுக்களில், பெரும்பாலானவற்றில் எந்த நன்மையும் இல்லை. எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடி இதனைச் செய்கின்றாரோ, அவருக்கு மகத்தான கூலியை விரைவில் நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்: 4:114)
மேற்கண்ட ஒன்பது வசனங்களை அல்லாஹ் இறக்கியருளினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மேற்கண்ட குர்ஆனின் வசனங்கள் இறங்கிய பொழுது ரிஃபாஆவிடம் ஆயுதத்தைத் திருப்பித்தந்தார்கள். அப்பொழுது கதாதா அவர்கள் தமது சிறிய தந்தையிடம் ஆயுதத்தைத் திருப்பித் தரும் பொழுது அவர் வயது முதிர்ந்த பெரியவராக அல்லது பார்வை குறைந்து பலவீனமானவராக அறியாமையில் இருந்தார். அவரின் இஸ்லாத்தை நயவஞ்சகத்தோடு ஆட்டம் கண்டதாகக் கண்டிருந்தேன். ஆயுதத்தைத் திருப்பித் தந்தபோது அவர் “சகோதரனின் மகனே, அவர் (முஹம்மது) அல்லாஹ்வின் பாதையில்தான் இருக்கிறார்கள். அவர் (போதிக்கும்) இஸ்லாம் சரியானதுதான் என்று நான் தெரிந்துகொண்டேன்.” என்று கூறினார்.
மேற்கண்ட வசனம் இறங்கியபோது பனூ உபைரிக்கைச் சேர்ந்த ‘புஷைர்’ என்பவன் இணைவைப்பவர்களுடன் இணைந்து, ஸுலாஃபா பின்த் ஸஃத் பின் சுமய்யா என்பவளிடம் தங்கிவிட்டான்.
அப்பொழுது அல்லாஹ், “எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன்: 4:115)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார். (அல்குர்ஆன்: 4:116)
என்ற இவ்விரு வசனங்களை இறக்கிவைத்தான்.
மேற்கண்ட இருவசனங்கள் ஸுலாஃபா குறித்து இறங்கிய பொழுது, ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்கள் தனது கவியிலிருந்து சில அடிகளை அள்ளி வீசினார்கள்.
(இந்தக் கவிதைகள் தீவான் ஹஸ்ஸான் பின் ஸாபித் என்ற நூலில் உள்ளது)
“அவனின் பயணப் பொதிகளையும், அவனையும் சேர்த்து எடுத்துத் தனது தலையில் வைத்து சுமந்து புறப்பட்டு அவனை அப்தஹ் எனும் ஆற்றுப்படுகையில் எறிந்துவிட்டு எனக்கு நீ ஹஸ்ஸானின் (எள்ளி நகையாடும்) கவிதையைத்தானே அன்பளிப்பாகத் தந்திருக்கிறாய்? நீ எனக்கு எந்த நன்மையும் கொண்டு வரவில்லை” என்று கூறினாள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
இந்தச் செய்தியை முஹம்மது பின் ஸலமா அல்ஹர்ரானீ என்பவரைத் தவிர வேறு எவரும் “மர்ஃபூஉ”வாக அறிவிக்கவில்லை என்றே நாம் அறிகிறோம்.
மேற்கண்ட செய்தியை யூனுஸ் பின் புகைர் உட்பட மற்றும் பலர் கதாதா வழியாகவே அறிவித்துள்ளனர். மேலும் இதை முஹம்மத் பின் இஸ்ஹாக் —> ஆஸிம் பின் உமர் பின் கதாதா என்ற அறிவிப்பாளர் தொடரில் ‘முர்ஸலா’கவே அறிவித்துள்ளார்கள். அதில் அன் அபீஹி – அன் ஜத்திஹீ என்ற வாசகத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்கள், அபூஸஈதில் குத்ரீ (ரலி) அவர்களின் (தாய்க்கு, தன் தந்தை அல்லாத வேறொரு கணவன் மூலம் பிறந்த) சகோதரர் ஆவார். அபூஸஈதில் குத்ரீ (ரலி) அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் என்பதாகும்.
(திர்மிதி: 3036)
حَدَّثَنَا الحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ أَبُو مُسْلِمٍ الحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، قَالَ:
كَانَ أَهْلُ بَيْتٍ مِنَّا يُقَالُ لَهُمْ: بَنُو أُبَيْرِقٍ بِشْرٌ وَبُشَيْرٌ وَمُبَشِّرٌ، وَكَانَ بُشَيْرٌ رَجُلًا مُنَافِقًا يَقُولُ الشِّعْرَ يَهْجُو بِهِ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَنْحَلُهُ بَعْضَ العَرَبِ ثُمَّ يَقُولُ: قَالَ فُلَانٌ كَذَا وَكَذَا، فَإِذَا سَمِعَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ الشِّعْرَ قَالُوا: وَاللَّهِ مَا يَقُولُ هَذَا الشِّعْرَ إِلَّا هَذَا الخَبِيثُ، أَوْ كَمَا قَالَ الرَّجُلُ، وَقَالُوا: ابْنُ الأُبَيْرِقِ قَالَهَا، قَالَ: وَكَانُوا أَهْلَ بَيْتِ حَاجَةٍ وَفَاقَةٍ، فِي الجَاهِلِيَّةِ وَالإِسْلَامِ، وَكَانَ النَّاسُ إِنَّمَا طَعَامُهُمْ بِالمَدِينَةِ التَّمْرُ وَالشَّعِيرُ، وَكَانَ الرَّجُلُ إِذَا كَانَ لَهُ يَسَارٌ فَقَدِمَتْ ضَافِطَةٌ مِنَ الشَّامِ مِنَ الدَّرْمَكِ، ابْتَاعَ الرَّجُلُ مِنْهَا فَخَصَّ بِهَا نَفْسَهُ، وَأَمَّا العِيَالُ فَإِنَّمَا طَعَامُهُمُ التَّمْرُ وَالشَّعِيرُ، فَقَدِمَتْ ضَافِطَةٌ مِنَ الشَّامِ فَابْتَاعَ عَمِّي رِفَاعَةُ بْنُ زَيْدٍ حِمْلًا مِنَ الدَّرْمَكِ فَجَعَلَهُ فِي مَشْرَبَةٍ لَهُ، وَفِي المَشْرُبَةِ سِلَاحٌ وَدِرْعٌ وَسَيْفٌ، فَعُدِيَ عَلَيْهِ مِنْ تَحْتِ البَيْتِ، فَنُقِبَتْ المَشْرُبَةُ، وَأُخِذَ الطَّعَامُ وَالسِّلَاحُ، فَلَمَّا أَصْبَحَ أَتَانِي عَمِّي رِفَاعَةُ، فَقَالَ: يَا ابْنَ أَخِي إِنَّهُ قَدْ عُدِيَ عَلَيْنَا فِي لَيْلَتِنَا هَذِهِ، فَنُقِبَتْ مَشْرَبَتُنَا فَذُهِبَ بِطَعَامِنَا وَسِلَاحِنَا. قَالَ: فَتَحَسَّسْنَا فِي الدَّارِ وَسَأَلْنَا فَقِيلَ لَنَا: قَدْ رَأَيْنَا بَنِي أُبَيْرِقٍ اسْتَوْقَدُوا فِي هَذِهِ اللَّيْلَةِ، وَلَا نَرَى فِيمَا نَرَى إِلَّا عَلَى بَعْضِ طَعَامِكُمْ، قَالَ: وَكَانَ بَنُو أُبَيْرِقٍ قَالُوا وَنَحْنُ نَسْأَلُ فِي الدَّارِ: وَاللَّهِ مَا نُرَى صَاحِبَكُمْ إِلَّا لَبِيدَ بْنَ سَهْلٍ، رَجُلٌ مِنَّا لَهُ صَلَاحٌ وَإِسْلَامٌ، فَلَمَّا سَمِعَ لَبِيدٌ اخْتَرَطَ سَيْفَهُ وَقَالَ: أَنَا أَسْرِقُ؟ فَوَاللَّهِ لَيُخَالِطَنَّكُمْ هَذَا السَّيْفُ أَوْ لَتُبَيِّنُنَّ هَذِهِ السَّرِقَةَ، قَالُوا: إِلَيْكَ عَنْهَا أَيُّهَا الرَّجُلُ فَمَا أَنْتَ بِصَاحِبِهَا، فَسَأَلْنَا فِي الدَّارِ حَتَّى لَمْ نَشُكَّ أَنَّهُمْ أَصْحَابُهَا، فَقَالَ لِي عَمِّي: يَا ابْنَ أَخِي لَوْ أَتَيْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتَ ذَلِكَ لَهُ، قَالَ قَتَادَةُ: فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: إِنَّ أَهْلَ بَيْتٍ مِنَّا أَهْلَ جَفَاءٍ، عَمَدُوا إِلَى عَمِّي رِفَاعَةَ بْنِ زَيْدٍ فَنَقَبُوا مَشْرَبَةً لَهُ، وَأَخَذُوا سِلَاحَهُ وَطَعَامَهُ، فَلْيَرُدُّوا عَلَيْنَا سِلَاحَنَا، فَأَمَّا الطَّعَامُ فَلَا حَاجَةَ لَنَا فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَآمُرُ فِي ذَلِكَ»، فَلَمَّا سَمِعَ بَنُو أُبَيْرِقٍ أَتَوْا رَجُلًا مِنْهُمْ يُقَالُ لَهُ: أُسَيْرُ بْنُ عُرْوَةَ فَكَلَّمُوهُ فِي ذَلِكَ، فَاجْتَمَعَ فِي ذَلِكَ نَاسٌ مِنْ أَهْلِ الدَّارِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ قَتَادَةَ بْنَ النُّعْمَانِ وَعَمَّهُ عَمَدَا إِلَى أَهْلِ بَيْتٍ مِنَّا أَهْلِ إِسْلَامٍ وَصَلَاحٍ، يَرْمُونَهُمْ بِالسَّرِقَةِ مِنْ غَيْرِ بَيِّنَةٍ وَلَا ثَبَتٍ، قَالَ قَتَادَةُ: فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمْتُهُ، فَقَالَ: «عَمَدْتَ إِلَى أَهْلِ بَيْتٍ ذُكِرَ مِنْهُمْ إِسْلَامٌ وَصَلَاحٌ تَرْمِيهِمْ بِالسَّرِقَةِ عَلَى غَيْرِ ثَبَتٍ وَبَيِّنَةٍ»، قَالَ: فَرَجَعْتُ، وَلَوَدِدْتُ أَنِّي خَرَجْتُ مِنْ بَعْضِ مَالِي وَلَمْ أُكَلِّمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ، فَأَتَانِي عَمِّي رِفَاعَةُ فَقَالَ: يَا ابْنَ أَخِي مَا صَنَعْتَ؟ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: اللَّهُ المُسْتَعَانُ، فَلَمْ يَلْبَثْ أَنْ نَزَلَ القُرْآنُ {إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الكِتَابَ بِالحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا} [النساء: 105] بَنِي أُبَيْرِقٍ {وَاسْتَغْفِرِ اللَّهَ} [النساء: 106] أَيْ مِمَّا قُلْتَ لِقَتَادَةَ {إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا} [النساء: 23] {وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ} [النساء: 108]- إِلَى قَوْلِهِ – {غَفُورًا رَحِيمًا} [النساء: 23] أَيْ: لَوْ اسْتَغْفَرُوا اللَّهَ لَغَفَرَ لَهُمْ {وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ} [النساء: 111]- إِلَى قَوْلِهِ – {وَإِثْمًا مُبِينًا} [النساء: 20] قَوْلَهُمْ لِلَبِيدٍ {وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ} [النساء: 113]- إِلَى قَوْلِهِ – {فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا} [النساء: 74] فَلَمَّا نَزَلَ القُرْآنُ أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالسِّلَاحِ فَرَدَّهُ إِلَى رِفَاعَةَ، فَقَالَ قَتَادَةُ: لَمَّا أَتَيْتُ عَمِّي بِالسِّلَاحِ، وَكَانَ شَيْخًا قَدْ عَشَا – أَوْ عَسَا – فِي الجَاهِلِيَّةِ، وَكُنْتُ أُرَى إِسْلَامُهُ مَدْخُولًا، فَلَمَّا أَتَيْتُهُ بِالسِّلَاحِ قَالَ: يَا ابْنَ أَخِي، هُوَ فِي سَبِيلِ اللَّهِ، فَعَرَفْتُ أَنَّ إِسْلَامَهُ كَانَ صَحِيحًا، فَلَمَّا نَزَلَ القُرْآنُ لَحِقَ بُشَيْرٌ بِالمُشْرِكِينَ، فَنَزَلَ عَلَى سُلَافَةَ بِنْتِ سَعْدِ ابْنِ سُمَيَّةَ فَأَنْزَلَ اللَّهُ {وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ المُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا} [النساء: 115]
فَلَمَّا نَزَلَ عَلَى سُلَافَةَ رَمَاهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ بِأَبْيَاتٍ مِنْ شِعْرٍ، فَأَخَذَتْ رَحْلَهُ فَوَضَعَتْهُ عَلَى رَأْسِهَا ثُمَّ خَرَجَتْ بِهِ فَرَمَتْ بِهِ فِي الأَبْطَحِ، ثُمَّ قَالَتْ: أَهْدَيْتَ لِي شِعْرَ حَسَّانَ؟ مَا كُنْتَ تَأْتِينِي بِخَيْرٍ.
هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ مُحَمَّدِ بْنِ سَلَمَةَ الحَرَّانِيِّ. وَرَوَى يُونُسُ بْنُ بُكَيْرٍ، وَغَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ مُرْسَلًا، لَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ. وَقَتَادَةُ بْنُ النُّعْمَانِ هُوَ: أَخُو أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ لِأُمِّهِ، وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: سَعْدُ بْنُ مَالِكِ بْنِ سِنَانٍ
Tirmidhi-Tamil-2962.
Tirmidhi-TamilMisc-2962.
Tirmidhi-Shamila-3036.
Tirmidhi-Alamiah-2962.
Tirmidhi-JawamiulKalim-2981.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31699-உமர் பின் கதாதா அவர்களை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - இவர் தனது தந்தையான நபித்தோழர் கதாதா பின் நுஃமான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து இவரின் மகனான ஆஸிம் பின் உமர் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டுமே புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் கூறியுள்ளனர். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் அதாவது இவர் மற்றவர்கள்போல் அறிவித்தால் ஏற்கலாம்; தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தாரீகுல் கபீர்-8101, அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/130, அஸ்ஸிகாத்-5/146, மீஸானுல் இஃதிதால்-3/218, தஹ்தீபுத் தஹ்தீப்-3/246, தக்ரீபுத் தஹ்தீப்-4991)
இதனடிப்படையில் தான் இவர் அறியப்படாதவர் என சிலர் கூறியுள்ளனர்.
ஆனால் இவரிடமிருந்து மஃமர் பின் ராஷித் பிறப்பு ஹிஜ்ரி 95
இறப்பு ஹிஜ்ரி 153
வயது: 58
அவர்களும் அறிவித்துள்ளார்.
ஒருவரிடமிருந்து பலமான ஒருவர் அறிவித்தாலே அவர் அறியப்பட்டவர் என்பது சிலரின் கருத்தாகும்.
பலமான இருவர் ஒருவரிடமிருந்து அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் என்பதுடன் நம்பகமானவர் ஆவார் என்பது தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் கருத்தாகும்.
(நூல்: ஃபத்ஹுல் முஃகீஸ்-2/52)
இந்தச் சட்டத்தை தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
ஸகாவீ ஆகியோர் நபித்தோழர்களுக்கு அடுத்த காலத்தைச் சேர்ந்த தாபிஈ விசயத்தில் ஏற்கப்படும் என்று கூறியுள்ளனர்.
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், மூத்த, நடுத்தர காலக்கட்டத்தைச் சேர்ந்த தாபிஈயாக இருந்து, அவர் மற்ற பலமான செய்திகளுக்கு மாற்றமாக இல்லாமல் அறிவித்தால் அவரின் செய்தி ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.
(நூல்: தீவானுள் ளுஅஃபா, அல்பாஇஸுல் ஹஸீஸ்-1/218, ஃபத்ஹுல் முஃகீஸ்-2/48, 52, 53)
(இதனடிப்படையில் இந்தச் செய்தியை சிலர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
(ஆய்வுக்காக: தவ்ஸீகு இப்னு ஹிப்பான்)
- இந்தச் செய்தியை முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யூனுஸ் பின் புகைர் முர்ஸலாக அறிவித்துள்ளார். அதாவது அவர் ஆஸிம் பின் உமர் அவர்கள் வரை மட்டுமே அறிவிப்பாளர்தொடரை கூறியுள்ளார். ஆஸிம் பின் உமர் தாபிஈ ஆவார். எனவே இது முர்ஸல்-மக்தூஃ ஆகும்.
- என்றாலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் யூனுஸ் பின் புகைர் அவர்களை விட பலமானவர் ஆவார்.
- ஹாகிம்-8164 இல் வரும் செய்தியில் யூனுஸ் பின் புகைர் அவர்களும் இந்தச் செய்தியை முத்தஸிலாக அறிவித்துள்ளதாக வந்துள்ளது. என்றாலும் அந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.
- முஹம்மத் பின் இஸ்ஹாக்கிடமிருந்து அறிவிக்கும் வேறு சிலர் இடம்பெறும் அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமாகும்.
எனவே முஹம்மத் பின் ஸலமா வரும் இந்தச் செய்தியே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்றதாகும்.
முஜாஹித், இக்ரிமா, கதாதா, இப்னு ஸைத் போன்ற குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த வசனம் பனூ உபைரிக் குடும்பத்தாரில் இருந்த ஒரு திருடன் விசயத்தில் இறங்கியது என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஃப்ஸீரு இப்னு கஸீர்-2/405, …)
1 . இந்த செய்தியில் வந்துள்ள சம்பவம் இதில் கூறப்பட்டுள்ள வசனங்களின் கருத்துக்கு தோதுவாக இருப்பதாலும்,
2 . முக்கிய குர்ஆன் விரிவுரையாளர்கள் காரணத்தை விளக்கியிருப்பதாலும் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் கதாதா பின் நுஃமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மத் பின் இஸ்ஹாக் —> ஆஸிம் பின் உமர் —> உமர் பின் கதாதா —> கதாதா பின் நுஃமான் (ரலி)
பார்க்க: திர்மிதீ-3036 , தாரீகுல் மதீனா-2/408 , அல்ஆஹாத்-இப்னு அபூஆஸிம்-4/14, அன்ஸாபுல் அஷ்ராஃப்-1/278, தஃப்ஸீருத் தபரீ-7/459 (9/177), தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-5934 (4/1059, 1060), அல்முஃஜமுல் கபீர்-15 , ஹாகிம்-8164 ,
- வாகித் பின் அம்ர் —> மஹ்மூத் பின் லபீத் (ரலி)
பார்க்க: தபகாதுல் குப்ரா-4/265 ,
- வஹ்ப் பின் ஜரீர் —> ஜரீர் பின் ஹாஸிம் —> ஹஸன் பஸரீ (ரஹ்)
பார்க்க: அன்ஸாபுல் அஷ்ராஃப்-1/277,
இன்ஷா அல்லாஹ் இதில் உள்ள கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.
عُمَرَ بْنِ قَتَادَةَ மக்பூல் ஆனவர். Ivarai இப்னு ஹிப்பான் பாலமானவர் கூறியுள்ளார். வேரா ஹதீஸ் கலை ஆய்வுகள் இவர் ஓடியே நம்பகதன்மையா உறுதி செய்யவில்லை.
عُمَرَ بْنِ قَتَادَةَ
Tahdeebul Kamaal
علماء جرح وتعديل
ذكره ابْن حبان فِي كتاب الثقات
Taqreeb Tahdib :
مجهول ، فقد تفرد بالرواية عنه ابنه عاصم بن عمر ، وذكره ابن حبان في الثقات
அஸ்ஸலாமு அலைக்கும். தமிழாக்கம் சரிபார்த்துவிட்டு தரம் பதிவிடப்படும். ஜஸாகல்லாஹு கைரா.