தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3193

A- A+


ஹதீஸின் தரம்: Pending

பாரசீகப் படுதோல்வியை, ரோமாபுரியின் வெற்றியை திருக் குர்ஆன் ஏன் கூற வேண்டும்? என்ற ஐயம் எழலாம். இது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் விளக்கம் இதோ:

ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. ரோம் (பாரசீகத்தால்) தோற்கடிக்கப்பட்டு விட்டது. பாரசீகர்கள், ரோமப் பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்று இணை வைப்பாளர்கள் விரும்பினர். ஏனெனில் இவர்களும் பாரசீகர்களும் சிலைகளை வணங்குபவர்கள்.

ரோமப் பேரரசு, பாரசீகத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்பினர். காரணம், (முஸ்லிம்களைப் போலவே) ரோமாபுரியினர் வேதக்காரர்கள்.

இணை வைப்பாளர்கள் தங்களது இந்த விருப்பத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரோமாபுரியினர் வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்தப் பதிலை முஷ்ரிக்குகளிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், “நமக்கும், உங்களுக்கும் மத்தியில் ஒரு தவணை குறிப்பிடுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் இன்னின்ன பொருட்களை எங்களுக்குத் தர வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இன்னின்ன பொருட்களை உங்களுக்குத் தருவோம்” என்று கூறினர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “ஐந்து வருடங்கள்” என்று கூறினார்கள்.

ஆனால் ரோமாபுரியினர் வெற்றி பெறவில்லை. அபூபக்ர் (ரலி) இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, “இதைப் பத்துக்குக் கீழ் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ரோம் வெற்றி பெற்று விட்டது.

இது தான், “ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது” என்ற வசனத்தில் “நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சி அடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான்” என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு விளக்கமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர்

(திர்மதி: 3193)

حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي إِسْحَاقَ الفَزَارِيِّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ،

فِي قَوْلِ اللَّهِ تَعَالَى: {الم غُلِبَتِ الرُّومُ فِي أَدْنَى الأَرْضِ} [الروم: 2] قَالَ: غُلِبَتْ وَغَلَبَتْ، كَانَ المُشْرِكُونَ يُحِبُّونَ أَنْ يَظْهَرَ أَهْلُ فَارِسَ عَلَى الرُّومِ لِأَنَّهُمْ وَإِيَّاهُمْ أَهْلُ أَوْثَانٍ، وَكَانَ المُسْلِمُونَ يُحِبُّونَ أَنْ يَظْهَرَ الرُّومُ عَلَى فَارِسَ لِأَنَّهُمْ أَهْلُ كِتَابٍ، فَذَكَرُوهُ لِأَبِي بَكْرٍ فَذَكَرَهُ [ص:344] أَبُو بَكْرٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَمَا إِنَّهُمْ سَيَغْلِبُونَ»، فَذَكَرَهُ أَبُو بَكْرٍ لَهُمْ، فَقَالُوا: اجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ أَجَلًا، فَإِنْ ظَهَرْنَا كَانَ لَنَا كَذَا وَكَذَا، وَإِنْ ظَهَرْتُمْ كَانَ لَكُمْ كَذَا وَكَذَا، فَجَعَلَ أَجَلًا خَمْسَ سِنِينَ، فَلَمْ يَظْهَرُوا، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلَا جَعَلْتَهُ إِلَى دُونَ» – قَالَ: أُرَاهُ العَشْرَ، قَالَ سَعِيدٌ: وَالْبِضْعُ مَا دُونَ العَشْرِ – قَالَ: ثُمَّ ظَهَرَتِ الرُّومُ بَعْدُ. قَالَ: فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {الم غُلِبَتِ الرُّومُ} [الروم: 1]- إِلَى قَوْلِهِ – {يَفْرَحُ الْمُؤْمِنُونَ بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَنْ يَشَاءُ} [الروم: 4] قَالَ سُفْيَانُ: «سَمِعْتُ أَنَّهُمْ ظَهَرُوا عَلَيْهِمْ يَوْمَ بَدْرٍ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3117.
Tirmidhi-Shamila-3193.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.