தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3535

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 60

தவ்பா – பாவமீட்சி பெறுவது; இஸ்திஃக்ஃபார்- பாவ மன்னிப்பு தேடுவதன் சிறப்பும், அல்லாஹ் தன் அடியார்களின் மீது காட்டும் கருணை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளும்.

ஸிர் பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் அல்முராதீt அவர்களிடம் காலுறைகளின் மீது மஸ்ஹ் செய்வது தொடர்பாக (விளக்கம்) கேட்க வந்தேன். அப்போதவர்கள், “ஸிர்ரே! நீங்கள் வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “கல்வியைப் பெற்றுக்கொள்ளும் ஆசையில் (வந்துள்ளேன்)” என்றேன். அப்போதவர்கள், “மாணவர் கல்வியறிவைப் பெறுவதை மகிழ்வுடன் ஏற்கும் வகையில் அவருக்காக வானவர்கள் தங்களின் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்று கூறினார்கள். அந்நிலையில் நான், “மலஜலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகு காலுறைகளின் மீது மஸ்ஹ் செய்வது குறித்து என் உள்ளத்தில் சந்தேகம் இருந்தது. நீங்கள் நபித்தோழர்களில் ஒருவராக இருந்தீர்கள். எனவே அது குறித்து நபி மீ அவர்கள் கூற நபிமொழி ஏதேனும் நீங்கள் செவியுற்றீர்களா என உங்களிடம் விசாரிக்கவே வந்தேன்” என்று கூறினேன். அதற்கவர்கள், “ஆம்; நாங்கள் பயணத்தில் (அல்லது பயணிகளாக) இருக்கும் போது (கால்களைக் கழுவிய பிறகு காலுறைகளை அணிந்திருந்தால்) மல ஜலம், சிறுநீர் கழித்தல், மற்றும் உறக்கம் ஆகியவற்றுக்குப் பின்னர் கூட மூன்று நாள்கள் வரை காலுறைகளைக் கழற்றாமல் அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ள நபி மீஅவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்து வந்தார்கள். எனினும், பெருந்துடக்கு ஏற்பட்டு (குளிப்புக் கடமையாகி) விட்டால் காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவ வேண்டும் என உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நான், “அன்பு குறித்து நபி மீ அவர்கள் ஏதேனும் கூற செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு ஸஃப்வான் t அவர்கள், “ஆம்! நாங்கள் நபி மீ அவர்களுடன் பயணம் மேற்கொண்டோம். நாங்கள் நபிகளாரின் சமூகத்தில் இருந்த போது கிராமப்புற அரபி ஒருவர் “முஹம்மதே!” என்று தனக்கே உரிய உரத்த குரலில் அவர்களை அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் மீ அவர்களும், அவருடைய சப்தத்தைப் போன்றே, “வாரும்” என்று (உரத்தகுரலில்) பதில் சொன்னார்கள்.

அந்நிலையில் நாங்கள் அவரிடம், “உமக்குக் கேடு உண்டாகட்டும். உமது சப்தத்தைக் குறைத்துக் கொள்ளும், ஏனெனில் நீர் நபி மீ அவர்களின் சமூகத்தில் இருக்கிறீர். இவ்விதம் நடந்து கொள்ள உமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினோம். அதற்கவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் சப்தத்தைக் குறைக்க மாட்டேன்” என்றார். மேலும் அந்தக் கிராமப்புற அரபி, “ஒரு மனிதர் ஒரு சமூகத்தைச் சேராதவராக இருந்தும் அவர்களை விரும்புகிறார்” என்று சொன்னார். அப்போது நபி மீ அவர்கள், “மறுமை நாளில் ஒவ்வொரு மனிதரும் தான் விரும்பியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள்.

ஸிர் (ரஹ்) அவர்கள் மேலும் கூறினார்கள்: ஸஃப்வான் t அவர்கள் எங்களுக்குப் பல செய்திகளைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் மேற்குத் திசையில் உள்ள வாசல் ஒன்றைப் பற்றி கூறுகையில் “அதன் அகலம் எழுபது ஆண்டுகள் பயணம் செய்து போகும் தொலைவாகும். அல்லது அதன் அகலத்தில் பயணிப்பவர் நாற்பது அல்லது எழுபது ஆண்டுகள் பயணம் செல்வார்” என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) கூறுகிறார்கள்:

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாளிலேயே தவ்பா-பாவமீட்சி பெறுவதற்காக திறந்த நிலையிலேயே சிரியாவின் திசையில் அவ்வாசலைப் படைத்தான். சூரியன் அந்த (மேற்கு)
திசையிலிருந்து உதயமாகாத வரை அவ்வாசல் …

(திர்மிதி: 3535)

بَاب فِي فَضْلِ التَّوْبَةِ وَالِاسْتِغْفَارِ وَمَا ذُكِرَ مِنْ رَحْمَةِ اللَّهِ بِعِبَادِهِ

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ المُرَادِيَّ،

أَسْأَلُهُ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ، فَقَالَ: مَا جَاءَ بِكَ يَا زِرُّ؟ فَقُلْتُ: ابْتِغَاءَ العِلْمِ، فَقَالَ: إِنَّ المَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ العِلْمِ رِضًا بِمَا يَطْلُبُ، فَقُلْتُ: إِنَّهُ حَكَّ فِي صَدْرِي المَسْحُ عَلَى الخُفَّيْنِ بَعْدَ الغَائِطِ وَالبَوْلِ، وَكُنْتَ امْرَأً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ أَسْأَلُكَ هَلْ سَمِعْتَهُ يَذْكُرُ فِي ذَلِكَ شَيْئًا، قَالَ: نَعَمْ، كَانَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَوْ مُسَافِرِينَ أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ إِلَّا مِنْ جَنَابَةٍ، لَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ، فَقُلْتُ: هَلْ سَمِعْتَهُ يَذْكُرُ فِي الهَوَى شَيْئًا؟ قَالَ: نَعَمْ، كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ إِذْ نَادَاهُ أَعْرَابِيٌّ بِصَوْتٍ لَهُ جَهْوَرِيٍّ يَا مُحَمَّدُ، فَأَجَابَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَحْوٍ مِنْ صَوْتِهِ هَاؤُمُ وَقُلْنَا لَهُ: وَيْحَكَ اغْضُضْ مِنْ صَوْتِكَ فَإِنَّكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ نُهِيتَ عَنْ هَذَا، فَقَالَ: وَاللَّهِ لَا أَغْضُضُ. قَالَ الأَعْرَابِيُّ: المَرْءُ يُحِبُّ القَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ يَوْمَ القِيَامَةِ»، [ص:546] فَمَا زَالَ يُحَدِّثُنَا حَتَّى ذَكَرَ بَابًا مِنْ قِبَلِ المَغْرِبِ مَسِيرَةُ عَرْضِهِ، أَوْ يَسِيرُ الرَّاكِبُ فِي عَرْضِهِ أَرْبَعِينَ أَوْ سَبْعِينَ عَامًا، قَالَ سُفْيَانُ: قِبَلَ الشَّامِ خَلَقَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ مَفْتُوحًا – يَعْنِي لِلتَّوْبَةِ – لَا يُغْلَقُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْهُ

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


Tirmidhi-Tamil-3458.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3535.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-96 .

2 comments on Tirmidhi-3535

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    ஆஸிம் பின் அபுன் நஜூத் பற்றிய விமர்சனங்கள் ஆய்வில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் முடிவு விரைவில் பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.