தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3540

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்:

ஆதமின் மகனே! நீ எதுவரை என்மீது ஆதரவு வைத்து, என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் இருந்தாலும் நான் உன்னை மன்னித்துக் கொண்டேயிருப்பேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.

ஆதமின் மகனே! உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கேட்டால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.

ஆதமின் மகனே! நீ பூமியை நிரப்பும் அளவுக்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னிடம் மீண்டுவந்தால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.

(திர்மிதி: 3540)

بَابٌ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الجَوْهَرِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ فَائِدٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ بَكْرَ بْنَ عَبْدِ اللَّهِ المُزَنِيَّ، يَقُولُ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3540.
Tirmidhi-Alamiah-3463.
Tirmidhi-JawamiulKalim-3491.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அப்துல்லாஹ் பின் இஸ்ஹாக்

3 . அபூஆஸிம்-ளஹ்ஹாக் பின் மக்லத்

4 . கஸீர் பின் ஃபாஇத்

5 . ஸயீத் பின் உபைத்

6 . பக்ர் பின் அப்துல்லாஹ்

7 . அனஸ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34535-கஸீர் பின் ஃபாஇத் என்பவரிடமிருந்து இவருடைய மகனான ஹஸன் என்பவரும், மிக பலமானவர்; ஹாஃபிள் என்ற தரத்தில் உள்ள அபூஆஸிம்-ளஹ்ஹாக் பின் மக்லத் அவர்களும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே (தனது வழமைப்படி) பலமானவரின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து இருவர் மட்டுமே அறிவித்துள்ளனர் என்பதால் இவரை சிலர் இவரின் நிலை அறியப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார். (இந்த வகையினர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை. இவர்களை போன்று மற்றவர்கள் அறிவித்தால் அது மக்பூல்-ஏற்கப்படும் என்பதே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களின் கருத்தாகும்.)

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-24/144, தஹ்தீபுத் தஹ்தீப்-3/464, தக்ரீபுத் தஹ்தீப்-1/809)

கஸீர் பின் ஃபாஇத் போன்று ஸல்ம் பின் குதைபா அவர்களும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறிவிக்கும் செய்தி மக்பூல்-ஏற்கப்படும் என்ற நிலையை அடைகிறது.

மேலும் இதில் வரும் ராவீ-17470-ஸயீத் பின் உபைத் அவர்கள் ஸயீத் பின் உபைத் அல்ஹுனாஈ என்பவர் ஆவார். இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
பஸ்ஸார், தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/33,  தக்ரீபுத் தஹ்தீப்-1/384)

இந்தச் செய்தியின் கருத்து வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.


2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கஸீர் பின் ஃபாஇத் —> ஸயீத் பின் உபைத் —> பக்ர் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: திர்மிதீ-3540 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4305 , ஹில்யதுல் அவ்லியா-2/231 ,


  • ஹில்யதுல் அவ்லியா-2/231.

حلية الأولياء وطبقات الأصفياء (2/ 231)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَاصِمٍ، قَالَ: ثَنَا أَبِي قَالَ: ثنا كَثِيرُ بْنُ فَائِدٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُبَيْدٍ السَّمَّاكُ، قَالَ: سَمِعْتُ بَكْرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: ثنا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ اللهَ تَعَالَى قَالَ: «يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي لَغَفَرْتُ لَكَ وَلَا أُبَالِي يَا ابْنَ آدَمَ لَوْ أَتَيْتَ بِقُرَابِ الْأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ تَفَرَّدَ بِهِ عَنْهُ سَعِيدُ بْنُ عُبَيْدٍ


  • ஸல்ம் பின் குதைபா —> ஸயீத் பின் உபைத் —> பக்ர் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6760 , அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-179 , அல்அஹாதீஸுல் முக்தாரா-1571 , 1578 ,


  • அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-179.

الترغيب في فضائل الأعمال وثواب ذلك لابن شاهين (ص: 63)
179 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ، ثنا يَحْيَى بْنُ حَكِيمٍ، ثنا أَبُو قُتَيْبَةَ، ثنا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” قَالَ رَبُّكُمْ: عَبْدِي، إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي فَإِنِّي سَأَغْفِرُ لَكَ عَلَى مَا كَانَ مِنْكَ، وَلَوْ لَقِيتَنِي بِقُرَابِ الْأَرْضِ خَطَايَا لَمْ تُشْرِكْ بِي شَيْئًا لَقِيتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً، وَلَوْ أَخْطَأْتَ حَتَّى تَبْلُغَ خَطَايَاكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُهَا لَكَ وَلَا أُبَالِي “


  • அல்அஹாதீஸுல் முக்தாரா-1571 , 1578.

لأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (4/ 399)

بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزْنِيُّ عَنْ أَنَسٍ

إِسْنَاده صَحِيح

1571 – أَخْبَرَنَا أَبُو الْمَعَالِي مُحَمَّدُ بْنُ صَافِي بْنِ عَبْدِ اللَّهِ النَّقَّاشُ بِبَغْدَادَ رَحِمَهُ اللَّهُ أَنَّ أَبَا بَكْرٍ مُحَمَّدَ بْنَ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ الْمُقْرِئَ الْمَعْرُوفَ بِالْمَزْرَفِيِّ أخبرهُمْ قثنا الشَّرِيفُ أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الصَّمَدِ بْنِ الْمُهْتَدِي بِاللَّهِ مِنْ لَفْظِهِ نَا أَبُو الْقَاسِمِ إِدْرِيسُ بْنُ عَلِيِّ بْنِ إِسْحَاقَ بْنِ يَعْقُوبَ الْمُؤَدِّبُ قثنا مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ نَا يَحْيَى بْنُ حَكِيمٍ أَبُو سَعِيدٍ قثنا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ نَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزْنِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ تَعَالَى عَبْدِي إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي فَإِنِّي سَأَغْفِرُ لَكَ عَلَى مَا كَانَ مِنْكَ وَلَوْ لَقِيتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا لَقِيتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً وَلَوْ أَخْطَأْتَ حَتَّى تَبْلُغَ خَطَايَاكَ أَعْنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي لغفرت لَك وَلَا أُبَالِي إِسْنَاده صَحِيح

1572 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ نَصْرٍ الصَّيْدَلانِيُّ بِأَصْبَهَانَ رَحِمَهُ اللَّهُ أَنَّ مَحْمُودَ بْنَ إِسْمَاعِيلَ الصَّيْرَفِيَّ أَخْبَرَهُمْ وَهُوَ حَاضِرٌ أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شَاذَانَ أَنا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْقَبَّابُ أَنا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ أَبِي عَاصِمٍ نَا يَحْيَى بْنُ حَكِيمٍ قثنا أَبُو قُتَيْبَةَ نَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الْهُنَائِيُّ قثنا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزْنِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَبُّكُمْ عَبْدِي إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي فَإِنِّي أَغْفِرُ لَكَ مَا كَانَ فِيكَ
أَخْرَجَهُ التِّرْمِذِيُّ بِتَمَامِهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ إِسْحَاقَ الْجَوْهَرِيِّ عَنْ أَبِي عَاصِمٍ عَنْ كَثِيرِ بْنِ فَايِدٍ عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ قَالَ سَمِعْتُ بَكْرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ نَا أَنَسٌ وَقَالَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
رَوَاهُ أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ عَن سعيد بن عبيد آخر

إِسْنَاده حسن


மேலும் பார்க்க: முஸ்லிம்-5215 .


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-42.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.