தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3788

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் விட்டுச் செல்லக் கூடிய இரண்டை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்வீர்களானால், எனக்குப் பின் எப்போதும் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். அவ்விரண்டில் முதலாவது மற்றதை விட மகத்தானது. ஒன்று அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனாகும்…

மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும்.

நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கௌஸரிடம் என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது. எனக்குபின்னால் இவ்விரண்டின் விசயத்தில் நீங்கள் எப்படி நடக்கவேண்டும் என்பதை சிந்தித்துக்கொள்ளுங்கள்…

அறிவிப்பவர் : ஸைத் பின் அர்க்கம் (ரலி)

(திர்மிதி: 3788)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُنْذِرِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، وَالأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَحَدُهُمَا أَعْظَمُ مِنَ الآخَرِ: كِتَابُ اللَّهِ حَبْلٌ مَمْدُودٌ مِنَ السَّمَاءِ إِلَى الأَرْضِ. وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي، وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الحَوْضَ فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3788.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3749.




إسناد ضعيف فيه عطية بن سعد العوفي وهو ضعيف الحديث

  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் பலவீனமானவரான அதிய்யா பின் ஸஃத் வரும் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. இவர் பலவீனமானவர். இவர் ஷீயா கொள்கையில் பிடிவாதம் கொண்டவர். நினைவாற்றலிலும் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.

وقال أبو داود : ليس بالذي يعتمد عليه
تهذيب التهذيب: (3 / 114)

  • மேலும் இந்த செய்தியை ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹபீப் பின் அபூ ஸாபித் தத்லீஸ் செய்பவர். இப்னு அப்பாஸ், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) போன்றோரிடம் தான் செவியேற்றுள்ளார். மற்ற நபித்தோழர்களிடம் செவியேற்கவில்லை என அலீ பின் மதீனீ அவர்கள் கூறியுள்ளார். (நூல் : ஜாமிஉத் தஹ்ஸீல்)
  • மேலும் இதில் வரும் அஃமஷ் தத்லீஸ் செய்பவர். அதிய்யாவிடமும், ஹபீப் பின் ஸாபிதிடமும் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை.

மேலும் பார்க்க : முஸ்லிம்-4782 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.