தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3862

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார்.

அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி)

(திர்மிதி: 3862)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ أَبِي رَائِطَةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ، إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3862.
Tirmidhi-Shamila-3862.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3826.




இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

  • ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் வரும் அப்துர் ரஹ்மான் பின் ஸியாத் என்பவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.
  • மேலும் இவரின் பெயர் குறித்து அப்துர் ரஹ்மான் பின் ஸியாத், அப்துர் ரஹ்மான் பின் அபூ ஸியாத், அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் என்று குளறுபடியாக இருப்பதாலும்,
  • இவரிடமிருந்து அபீதா பின் அபூ ராஇதா என்பவர் மட்டுமே தனித்து அறிவிப்பதாலும் இவர் அறியப்படாதவர் என்று இமாம் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இதே வார்த்தையில் வரும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாகவே உள்ளது.

எனினும், நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களை திட்டாதீர்கள் என்று கூறினார்கள் – என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன. பார்க்க: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
3673
.

இந்த ஹதீஸின் தரம் பற்றி இமாம் நாஸிருத்தீன் அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் தனது ஸில்ஸிலதுல் அஹாதீஸில் ளயீபா என்ற நூலில் விரிவாக கூறியுள்ளார்கள். பார்க்க: ஹதீஸ் எண்-2901

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.