தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-589

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அருமை சிறுவனே! தொழுகையில் திரும்பிப் பார்ப்பதை விட்டு உன்னை எச்சரிக்கின்றேன்.ஏனெனில் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது அழிவை ஏற்படுத்தும். அப்படி திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமென்றால் உபரியான தொழுகையில் திரும்பிப் பார்த்துக்கொள். கடமையான தொழுகையில் திரும்பிப் பார்க்காதே!

என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்.

(திர்மிதி: 589)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَاتِمٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَنَسٍ قَالَ:

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بُنَيَّ، إِيَّاكَ وَالِالتِفَاتَ فِي الصَّلَاةِ، فَإِنَّ الِالتِفَاتَ فِي الصَّلَاةِ هَلَكَةٌ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَفِي التَّطَوُّعِ لَا فِي الفَرِيضَةِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-589.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-537.




  • இதில் வரும் علي بن زيد القرشي அலி பின் ஸைத் என்பவர் பலவீனமானவர்.
  • இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் இவரை ஆதாரமாக எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 7 பக்: 322)

وقال ابن خزيمة : لا أحتج به لسوء حفظه
تهذيب التهذيب: (3 / 162)

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.