ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், ‘அது அனுமதிக்கப்பட்டதே!’ என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ‘உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!’ என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்’ என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்)
(திர்மிதி: 824)حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ،
أَنَّهُ سَمِعَ رَجُلًا مِنْ أَهْلِ الشَّامِ، وَهُوَ يَسْأَلُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ التَّمَتُّعِ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: هِيَ حَلَالٌ، فَقَالَ الشَّامِيُّ: إِنَّ أَبَاكَ قَدْ نَهَى عَنْهَا، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: ” أَرَأَيْتَ إِنْ كَانَ أَبِي نَهَى عَنْهَا وَصَنَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَأَمْرَ أَبِي نَتَّبِعُ؟ أَمْ أَمْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، فَقَالَ الرَّجُلُ: بَلْ أَمْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَقَدْ صَنَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-753.
Tirmidhi-Shamila-824.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-752.
சமீப விமர்சனங்கள்