தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகள் பற்றிய விளக்கம்:

ஹதீஸ்வகைகளில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.

அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர். (இதைப் பற்றி பார்க்க: முத்ரஜ்)

இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துக் கொள்ளவேண்டிய வகை, அறிவிப்பாளர்களின் தவறின் காரணமாக அல்லது பொய்யின் காரணமாக, அல்லது இது போன்ற வேறு சில காரணமாக “வெவ்வேறு அறிவிப்பாளரின் தனித்தனியான இரண்டு ஹதீஸ்கள் ஒரே ஹதீஸாக; அல்லது இரண்டு ஹதீஸ்களின் சில கருத்துக்கள் கலந்து ஒரே ஹதீஸாக அறிவிக்கப்பட்டு அதனால் ஏற்படும் கருத்து சிதைவுப் பற்றியதாகும்”.

இதை இல்முல் இலல் அறிஞர்கள், துகூலு ஹதீஸின் ஃபீ ஹதீஸின் என்பது போன்ற வார்த்தைகளில் குறிப்பிடுவார்கள். இவ்வாறு அடிக்கடி தவறாக அறிவிக்கும் அறிவிப்பாளர்களைப் பற்றி அறிஞர்கள் குறிப்பிடும்போது அஹாதீஸுஹூ மக்லூபதுன்- இவரின் ஹதீஸ்கள் தலைகீழாக மாற்றப்பட்டவை என்பது போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடுவார்கள்.

ஒரு ஹதீஸில் இல்லத் எனும் நுணுக்கமான குறைப்பாடு உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிய جمع طرق الحديث அதன் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களை ஒன்றுத்திரட்டி, அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களின் தரங்களை ஆய்வு செய்து அதன்படி முடிவு செய்வது இலல் துறையின் முக்கிய அம்சமாகும்.

இந்த வகையை தெரிந்துக் கொள்வதற்கும் جمع طرق الحديث அவசியமாகும். இந்த வகையைச் சேர்ந்த சில செய்திகளை அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். இன்னாரின் செய்தியுடன், வேறு ஒருவரின் செய்தி கலந்துவிட்டது என்றோ அல்லது இந்த அறிவிப்பாளர்தொடர் இந்த செய்தியில் கலந்துவிட்டது என்றோ குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கு உதாரணமான செய்தி:

பார்க்க: இப்னு குஸைமா-176 .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.